October 10, 2026
தண்டோரா குழு
கோவையில் யூஸ்டு கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கு பயனளிக்கும் வகையில், 500″க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் ஒரே இடத்தில் இடம்பெறும் 11-வது மாபெரும் Used Cars மாநாடு நடைபெற உள்ளது.
“CARS327” நிறுவனத்தின் சார்பில் வருகின்ற நவராத்திரி ,ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, யூஸ்டு கார்கள் இரண்டாவது மாநாடு, விற்பனை திருவிழா அக்டோபர் 9 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை, கோவை பட்டணம் பகுதியில் உள்ள L&T Bypass-ல் அமைந்துள்ள “CARS327” வளாகத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
பல்வேறு வகையான பயன்படுத்தப்பட்ட கார்களை ஒரே இடத்தில் பார்வையிட்டு, தங்களது தேவைக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ற காரை தேர்வு செய்யும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள், Assured Gifts மற்றும் சிறப்பு Service Offers உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் நேரில் சென்று கார்களை பார்வையிட்டு, விலை மற்றும் வசதிகளை ஒப்பிட்டு, தங்களுக்கு ஏற்ற காரை தேர்வு செய்ய இது ஒரு வாய்ப்பாக அமையும் என கார்ஸ் 327 நிறுவனர் விஷ்ணு வேணுகோபால் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு 86819 66699, 89404 66699, 84287 66699 அல்லது 89407 66699 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.