• Download mobile app
18 Sep 2026, FridayEdition - 3873
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘வெட்டிங் சிக்னேச்சர்ஸ்’ ஆபரணத் தொகுப்பு ‘ரிவா பை தனிஷ்க்’ அறிமுகம்

September 18, 2026 தண்டோரா குழு

தனிஷ்க்கின் பிரத்தியேகத் திருமண நகை பிராண்டான ‘ரிவா பை தனிஷ்க்’ ‘வெடிங் சிக்னேச்சர்ஸ்’ என்ற புதிய நகைத்தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரிவாவின் ’வெட்டிங் சிக்னேச்சர்’ ஆபரணத் தொகுப்பின் அறிமுகம் குறித்து தனிஷ்க் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி செல்வி பெல்கி ஷெரிங் கூறுகையில்,

தமிழ்,தெலுங்கு, ராஜஸ்தானி/மார்வாடி, குஜராத்தி, மராத்தி மற்றும் பான்-இந்தியா/மெட்ரோ என ஆறு முக்கிய கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் ஆறு பிரத்தியேக மணப்பெண் திருமண ஆபரணத் தொகுப்பாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய இந்திய மணப்பெண்கள் தங்களது கலாச்சாரப் பாரம்பரியத்தை மதிக்கும் அதே வேளையில் அதைத் தங்களின் தனித்துவமான பாணியில் வெளிப்படுத்த விரும்புகிறார்கள் என்ற புரிதலின் அடிப்படையில் இந்த திருமண நகை தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சடங்கிற்கும், தருணத்திற்கும் ஏற்ற தனித்துவமான நகைகளைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், திருமணத்தின் பல்வேறு நிகழ்வுகளுக்குப் பொருத்தமான முழுமையான ஆபரணத் தொகுப்பாக ‘வெட்டிங் சிக்னேச்சர்ஸ்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் திருமண ஆபரணத் தொகுப்பு, அப்பகுதியின் செழுமையான ஆபரணக் கலைநயத்தைப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக கோயில்களில் இடம்பெற்றிருக்கும் கலைநயமிக்க படைப்புகளால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்புகள், மிகவும் நுணுக்கமான நகாஷி மற்றும் ஸ்டாம்பிங் வேலைப்பாடுகள், கம்பீரமான தோற்றப் பொலிவு கொண்ட நகைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இவை இப்பிராந்தியத்தின் செழுமையான ஆபரணக் கலை மரபின் மூலம், தமிழ் மணப்பெண்ணின் திருமண நகைத் தொகுப்பை முழுமையாக்குகிறது. முக்கிய திருமண விழாக்களுக்காக, பல்வேறு வடிவமைப்புகளிலான கழுத்தணிகள் மற்றும் அடுக்கு ஹாரங்களை தமிழ் மணப்பெண்கள் விரும்பி அணிவதால் அதற்கேற்ற வகையில், சோக்கர்கள், பட்டா நெக்லஸ்கள் மற்றும் பிரம்மாண்டமான ஹாரங்களை ஒன்றிணைத்து,பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இத்தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொலிவுமிக்க நவரத்தினங்கள், கெம்பு மற்றும் பச்சைக் கற்கள், கிளாஸ் குந்தன் மற்றும் முத்துக்கள் ஆகியவை கண்களைக் கவரும் வண்ணத்தையும், அழகியலையும், ஜொலிஜொலிப்பையும் சேர்க்கின்றன; அதேநேரத்தில் மலர்கள் மற்றும் மயில் உருவங்களை மையமாகக் கொண்ட நுணுக்கமான வடிவமைப்பு வேலைப்பாடுகள் இவற்றிற்கு தனித்துவமான அழகைத் தருகின்றன.

இந்த அம்சங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, தமிழ் மணப்பெண் அலங்காரத்திற்கு இருக்கும் பாரம்பரியத்தைத் தனிஷ்க்கின் சமகால நவீன வடிவமைப்பு நேர்த்தியுடன் ஒன்றிணைத்து, ஒரு நேர்த்தியான திருமண ஆபரணத் தொகுப்பாக அறிமுகமாகியுள்ளது. மேலும், கலீராக்கள்,மாதா பட்டி, வாங்கிகள்,சூரிய-சந்திர பிரபை ,நெற்றிச்சுட்டி மற்றும் மாட்டல் ஆகியவற்றுடன்,பாரம்பரிய பிராந்திய நகைகளுக்கு நவீன வடிவங்களையும் ஒருங்கிணைந்து ரிவா தனது ஆபரணத்தொகுப்பை விரிவாக்கியுள்ளது.

தனிஷ்க்கின் டிசைன் எக்ஸலன்ஸ் சென்டர் மூலம் ‘வெட்டிங் சிக்னேச்சர்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆறு விதமான மணப்பெண் கலாச்சாரங்களைப் பற்றிய பிராந்தியப் புரிதலையும், அசத்தலான வடிவமைப்புத் திறனையும், நுணுக்கமான கைவினைத்திறனையும் ஒன்றிணைக்கிறது. தென்னிந்திய சந்தையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் ரிவா பிராண்டின் முகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்பிராந்திய மணப்பெண்களுக்கான ‘வெட்டிங் சிக்னேச்சர்ஸ்’ விளம்பரப் பிரச்சாரத்தை இவர் முன்னெடுத்துச் செல்கிறார் என்றார்.

மேலும் படிக்க