August 14, 2026
தண்டோரா குழு
டாடா குழுமத்தின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனை நிறுவனமான க்ரோமா தனது சுதந்திர தினச் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதன் மூலம் வீட்டு உபயோகப் பொருட்கள், வாடிக்கையாளர்களுக்கான மின்னணு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்குப் பல்வேறு வகையான சலுகைகளை வழங்குகிறது.
டாடா நியூ ரிவார்ட்கள்,வங்கிகள் மூலம் பெறும் கேஷ்பேக் சலுகைகள், பழைய தயாரிப்புகளுக்குப் பதிலாக புதிய தயாரிப்புகளுக்கு தரம் உயர்த்த உதவும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் போனஸ்கள் மூலம் வாடிக்கையாளர்கள் கூடுதல் பலன்களைப் பெறலாம்.வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறை சாதனங்கள் மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் தயாரிப்புகளுக்கு அதிரடியாக 20% தள்ளுபடி ,டிவிகள்,ரெஃப்ரிஜிரேட்டர்கள்,ஏசிகள், வாஷிங் மெஷின்கள்,சமையலறை சாதனங்கள்,ஹோம் ஆடியோ, ஏர் ப்யூரிஃபையர்கள் மற்றும் வேக்வம் கிளீனர்கள் உட்படத் தேர்வு செய்யப்பட்ட சாதனங்கள் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்குகிறது க்ரோமா.
இதன் மூலம் க்ரோமா தனது வாடிக்கையாளர்கள் தங்களின் வீடுகளில் பயன்படுத்தும் மின்னணு சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான அருமையான வாய்ப்பை இந்தச் சிறப்பு விற்பனை வழங்குகிறது.சாம்சங் 75” நியோ கியூஎல்இடி 8கே டிவி 60% வரை தள்ளுபடி பெறலாம் 55 இன்ச் வரையிலான எந்தவொரு டிவியையும் வாங்குங்கள்: எல்ஜி சவுண்ட்பார் எஸ்40டி-ஐ வெறும் ரூ.10,990-க்கு பெறலாம்.8 கிலோ டாப் லோட் வாஷிங் மெஷின் ரூ.21,700-ல் இருந்து தொடங்குகிறது.ஃபிராஸ்ட் ஃப்ரீ ரெஃப்ரிஜிரேட்டர் 436எல்
ரூ. 43,790-இல் இருந்து தொடங்குகிறது. சுதந்திர தினச் சேமிப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், ரூபே க்ரெடிட் கார்ட்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, எந்த வங்கியாக இருந்தாலும் அனைத்து தயாரிப்புகளின் பிரிவுகளுக்கும் கூடுதல் பலன்களை க்ரோமா வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தயாரிப்புகளை வாங்கும் மதிப்பிற்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் உடனடித் தள்ளுபடிகளைப் பெறலாம். முழு கட்டணப் பரிவர்த்தனைகளுக்கு ரூ.5,000 மதிப்பிலான தயாரிப்புகளுக்கு ரூ.250 முதல் தள்ளுபடிகள் தொடங்குகின்றன; தவணை முறைக்கு ரூ.20,000 மதிப்பிலான தயாரிப்புகளுக்கு ரூ.1,250 முதல் தள்ளுபடிகள் சலுகைகள் தொடங்குகின்றன.டாடா நியூ க்ரெடிட் கார்ட்களைப் பயன்படுத்தி 5% வரை கூடுதல் நியூ காயின்களைப் பெற்று வாடிக்கையாளர்கள் தங்களின் சேமிப்பை மேலும் அதிகரிக்கலாம்.
தங்களின் லேப்டாப்புகளை மேம்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, பல்வேறு லேப்டாப் மாடல்களுக்கு அட்டகாசமான தள்ளுபடிகளையும், மாணவர்களுக்கான சிறப்புச் சலுகைகளையும் க்ரோமா வழங்குகிறது. விண்டோஸ் லேப்டாப்புகள் மாணவர்களுக்கு 10% வரை தள்ளுபடி.மேக்புக் ஏர் எம் 5 மாதம் ரூ.5,621 என்ற எளிய தவணை முறையில் தொடங்குகிறது. ஐபேட் 11-வது தலைமுறை மாதம் ரூ.1,939என்ற எளிய தவணை முறையில் தொடங்குகிறது.ஸ்னாப்டிராகன் லேப்டாப்புகள் ரூ.8,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ்.
தேர்வு செய்யப்பட்ட லேப்டாப்புகளுக்கு ரூ.32,000 மதிப்பிலான ஏஐ கிளாஸ்கள் இலவசமாகப் பெறலாம்.டாடா நியூ ரிவார்ட்கள், வங்கிகள் மூலம் வழங்கப்படும் கேஷ்பேக் சலுகைகள், பழைய ஸ்மார்ட்ஃபோன்களுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட்ஃபோன்களாக தரம் உயர்த்தும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் போனஸ்கள் உள்ளிட்ட இதர தள்ளுபடிகளுடன், சந்தையின் சமீபத்திய முதன்மை ஸ்மார்ட்ஃபோன்களை வாடிக்கையாளர்கள் அருமையான விலையில் வாங்கலாம்.விவோ எக்ஸ்300 எஃப்ஈ ரூ.51,800 முதலிருந்து தொடங்குகிறது. கூகுள் பிக்சல் 10 ரூ.67,999 முதலிருந்து தொடங்குகிறது. ஐஃபோன் 17 ப்ரோ ரூ.75,900 முதலிருந்து தொடங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் வரிசைகளுக்கு ரூ.5,990 மதிப்பிலான சோனி ஹெட்போன்கள் மற்றும் ரூ.8,800 மதிப்பிலான அமெரிக்கன் டூரிஸ்டர் கொலராடோ பேக் இலவசமாகப் பெறலாம்.
அனைத்து விலைகள், சலுகைகள், தள்ளுபடிகள், கேஷ்பேக், எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் மற்றும் இதர பலன்கள் அனைத்தும் குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டவை; தயாரிப்பு, மாடல், ஷோரூம், நகரம் மற்றும் தயாரிப்புகள் எண்ணிக்கையை பொறுத்து மாறுபடலாம்.