• Download mobile app
27 Jul 2026, MondayEdition - 3820
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

GRG Gen Nxt LaunchPad 2026: AI, Agri-Tech தொடக்க நிறுவனங்களுக்கு ரூ.1.20 லட்சம் பரிசு; Xploro.io, Oscillo Machines முதலிடம்

July 27, 2026 தண்டோரா குழு

கோயம்புத்தூரில் உள்ள GRG Gen Nxt இன்குபேட்டர் சார்பில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அக்ரி-டெக் (Agri-Tech) துறைகளில் செயல்படும் வருவாய் ஈட்டும் தொடக்க நிறுவனங்களுக்கான முதல் LaunchPad Pitch Competition 2026 வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 70 தொடக்க நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில், 16 நிறுவனங்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் முன் தங்களது தொழில் யோசனைகளை விளக்கின.

ஒவ்வொரு நிறுவனமும் 7 நிமிட பிட்ச் மற்றும் 3 நிமிட கேள்வி-பதில் அமர்வில் பங்கேற்றன. நிகழ்வில் ஏஞ்சல் முதலீட்டாளர்கள், வெஞ்ச்சர் கேபிடலிஸ்டுகள் மற்றும் தொழில் தலைவர்கள் கலந்து கொண்டு நிறுவனங்களின் வளர்ச்சி வாய்ப்புகளை மதிப்பீடு செய்தனர்.
AI பிரிவில் Xploro.io முதல் பரிசான ₹50,000, Minie Labs இரண்டாம் பரிசான ₹25,000, Intoleads மூன்றாம் பரிசான ₹10,000 பெற்றன.

Creamstack மற்றும் Vidmagin ஆகிய நிறுவனங்களுக்கு தலா ₹5,000 சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.Agri-Tech பிரிவில் Oscillo Machines முதல் பரிசான ₹50,000 மற்றும் Grow Your Farms இரண்டாம் பரிசான ₹25,000 பெற்றது. மொத்தமாக ₹1.20 லட்சம் பணப்பரிசுகள் வழங்கப்பட்டதுடன்,தேர்வான நிறுவனங்களுக்கு GRG Gen Nxt Virtual Incubation Programme (VIP) வாய்ப்பு, முதலீட்டாளர் வழிகாட்டுதல் மற்றும் ₹50 லட்சம் வரை முதலீட்டு அணுகல் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

StartupTN, Startup Singam, Prime Bottomline Ventures, NativeLead மற்றும் TiE Coimbatore ஆகியவை இந்த நிகழ்விற்கு ஆதரவு அளித்தன. AI மற்றும் Agri-Tech துறைகளில் கோயம்புத்தூரை முன்னணி புதுமை மையமாக உருவாக்கும் நோக்கில் இதுபோன்ற முதலீட்டாளர் மையப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று GRG Gen Nxt தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க