• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஸ்டேன்ஸ் மேல்நிலைப்பள்ளி ICSE/ISC ஆண்டு விழா விமரிசையாக நடைபெற்றது

July 25, 2026 தண்டோரா குழு

கோவை ஸ்டேன்ஸ் மேல்நிலைப்பள்ளியின் ICSE/ISC பிரிவுக்கான 2026–2027 கல்வியாண்டு ஆண்டு பரிசளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள்,பள்ளி வளாகத்தில் உள்ள ராஜேந்திரன் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சாந்தி ஆஷ்ரம் தலைவரும்,சர்வதேச குழந்தைகள் மற்றும் பொது சுகாதார மையத்தின் நிறுவனருமான டாக்டர் கெசெவினோ ஆரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்வி,விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சி,பள்ளியின் துணை தலைமை மாணவர் ஆரோன் யோஹான் ஜோசப் தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனை மற்றும் பைபிள் வாசிப்புடன் தொடங்கியது. பள்ளி முதல்வர் ஜெனட் ஜெயப்பிரகாஷ் வரவேற்புரை வழங்கி, பள்ளியின் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

சிறப்புரையில் பேசிய டாக்டர் கெசெவினோ ஆரம்,மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் சமூக அக்கறை, மனிதநேயம் மற்றும் நற்பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பின்னர் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள் வழங்கிய ‘Try a Little Kindness’, ‘Football Fiesta’, ‘Cartoon Carnival of Hamelin’, ‘Echoes of Sesame’ உள்ளிட்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.

விழாவில் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பாளர் பிலிப் ஜே. ஃபவுலர், கௌரவப் பொருளாளர் டாக்டர் ஜேம்ஸ் ஞானதாஸ்,நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் சுசீதா ராமச்சந்திரன்,தலைமை நிர்வாக அதிகாரி வி.எம்.ஜான், ஆங்கிலோ-இந்தியன் பிரிவு முதல்வர் பி. ஏ. ஜான் ஸ்டீபன்,ஸ்டேன்ஸ் CBSE முதல்வர் ஐலின் ஜெத்ரோ,ஸ்டேன்ஸ் இன்டர்நேஷனல் முதல்வர் ஜார்ஜினா சிம்மன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி தலைமை மாணவர் நோயல் வின்சென்ட் கூடின்கோ மற்றும் தலைமை மாணவி அவந்திகா பி. ஆகியோர் நன்றியுரை வழங்கினர்.

மேலும் படிக்க