• Download mobile app
17 Jul 2026, FridayEdition - 3810
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சரவணம்பட்டி புரோஜோன் மாலின் 9-ம் ஆண்டு கொண்டாட்டம் – 60 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிப்பு

July 17, 2026 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள புரோஜோன் மால் தனது 9-வது ஆண்டு விழாவை வி ஆர் டேர்னிங் சூ9 என்ற பெயரில் நாளை ஜூலை -17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கோலாகலமாக கண்கவர் கொண்டாட்டங்களை கோவை மக்களோடு சேர்ந்து கொண்டாடுகின்றது.

இந்த ஆண்டு விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு மால் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரங்களாலும்,கோவை மக்கள் தங்கள் நினைவுகளை விழாக்கால அனுபவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் வாடிக்கையாளர்களுக்காக வருகிற ஜூலை – 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 100 – க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் மீது அதிகபட்சமாக 60 சதவீதம் வரை தள்ளுபடி விற்பனையும், மேலும் விழா சலுகையாக ரூ.5,999/* – க்கு ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500/* மதிப்பும் ரூ.9,999/* – க்கு ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000/* மதிப்புள்ள மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை இலவசமாக ஸ்பார் ஹைப்பர் மார்க்கெட் – ல் ஷாப்பிங் செய்து பொருட்களை அள்ளி செல்லலாம்.

ஆண்டுவிழா கொண்டாட்டதின் சிறப்பம்சமாக வருகிற ஜூலை – 19 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் பிரம்மாண்ட கேக் கட்டிங் நிகழ்வு, தி பிக்கெஸ்ட் பலூன் டிராப் மற்றும் சாக்லட் சவருடன் லேசர் ஷோ உள்ளிட்ட விழா கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரம்மாண்ட கேக் கட்டிங் நிகழ்வு கோவை மக்கள் முன்னிலையிலும், கோவை மக்களாலும் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த மூன்று நாட்களும் நியூஸ் 18 தொலைகாட்சி நடத்தும் தோரணமாயிரம் நிகழ்ச்சி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் டிஜெ பிளாக் – ன் டி ஜெ கொண்டாட்ட இரவு, ஸ்டிரம்ஸ் என் ஹம்ஸ் சிங் அலோன் என ஏகப்பட்ட கலை நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொண்டாட்டங்கள் தொடர்பாக மால் நிர்வாகம் இந்த 3 நாட்களின் விழாக்கால கொண்டாட்டங்கள் குறிப்பாக கோவை மக்கள் புரோஜோன் மாலோடு இருக்கும் நினைவுகளின் நிமித்தமாகவும் கோவை மக்களின் குடும்ப விழாவாக கொண்டாடப்படும் எனவும், தெரிவித்துள்ளது.

இவ்விழாவிற்கு அனுமதி இலவசம்.

மேலும் படிக்க