• Download mobile app
26 Aug 2026, WednesdayEdition - 3850
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடன அசைவுகளில் கணிதம்… கோவையில் ‘Move Through Math’ நூல் வெளியீடு

July 11, 2026 தண்டோரா குழு

கணிதத்தை மனப்பாடமாக அல்லாமல், உடல் அசைவுகள் மற்றும் பரதநாட்டியத்தின் மூலம் அனுபவப்பூர்வமாக கற்றுக்கொடுக்கும் புதிய கல்வி அணுகுமுறையை அறிமுகப்படுத்தும் ‘Move Through Math’ நூல், கோவையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.

ஜெர்மனியைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளரும், பரதநாட்டியக் கலைஞரும், கல்வி ஆராய்ச்சியாளருமான டாக்டர் ஜனனி சுரேஷ் ராம் எழுதியுள்ள இந்த நூல், கணிதம் மற்றும் Embodied Learning எனப்படும் உடல்சார்ந்த கற்றல் முறையை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் ஜெர்மனியில் மேற்கொண்ட ஆய்வுகள், பயிலரங்குகள் மற்றும் கள அனுபவங்களின் அடிப்படையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவை பந்தய சாலையில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர் ராதே ஜக்கி மற்றும் எஸ்.எஸ்.வி.எம். கல்விக் குழுமங்களின் நிறுவனரும் கல்வியாளருமான டாக்டர் மணிமேகலை மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நூலை வெளியிட்டனர்.
கலைமாமணி லாவண்யா சங்கர் வரவேற்புரை ஆற்றினார். அனாதி ஃபவுண்டேஷன் இணை நிறுவனர் மற்றும் ஆய்வாளரான ஸ்மிரிதி ரேகா ஆதிநாராயணன் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜனனி சுரேஷ் ராம், “குழந்தைகள் கணிதத்தை எண்கள், சூத்திரங்கள் மற்றும் குறியீடுகள் வழியாக மட்டுமல்லாமல், அசைவுகள், தாளம், சைகைகள் மற்றும் விளையாட்டின் மூலம் அனுபவித்து கற்றுக்கொள்ளும் போது, அவர்களின் புரிதல் ஆழமாகவும் நீடித்ததாகவும் அமையும். அந்த எண்ணத்தின் வெளிப்பாடே ‘Move Through Math’ நூல்,” என்றார்.

5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்நூல், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது அத்தியாயங்களைக் கொண்ட இதில், வடிவங்கள், உருவங்கள், எண் அறிவு, கணிதச் செயல்பாடுகள், அளவீடு, தரவு பகுப்பாய்வு, இட–கால விழிப்புணர்வு உள்ளிட்ட 46 அடிப்படை கணிதக் கருத்துகள் செயல்பாடுகள் மற்றும் அசைவுகளின் வழியாக விளக்கப்பட்டுள்ளன.

கல்வி உலகில் மாற்று கற்றல் முறைகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், கணிதத்தை குழந்தைகளுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றும் இந்த நூல், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் புதிய விவாதத்தையும் வரவேற்பையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க