• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக யோகா தினம்: ஆர்ய வைஸ்ய சமாஜம் சார்பில் சிறப்பு யோகா பயிற்சி

June 21, 2026 தண்டோரா குழு

கோயமுத்தூர் வைசியாள் வீதியில் அமைந்துள்ள வாசவி வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சமாஜ உறுப்பினர்கள், பெண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சிக்கு யோகா மாஸ்டர் பி.ராஜா தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய யோகா மாஸ்டர் பி. ராஜா,

“தினசரி யோகா பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மன அழுத்தத்தை குறைத்து, மன அமைதியையும் அளிக்கிறது. குறிப்பாக வாசி கிரியா (Vasi Kriya) என்பது உடல், மனம் மற்றும் உயிர்சக்தியை ஒருங்கிணைக்கும் சிறப்பான மூச்சுப் பயிற்சியாகும். இதனை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் உடல்நலம் மேம்பட்டு, மன ஒருமைப்பாடு மற்றும் உள்ளார்ந்த அமைதி கிடைக்கும்” என்று கூறினார். மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பல்வேறு மூச்சுப் பயிற்சி நுட்பங்களை (Breathing Techniques) நேரடியாக கற்றுக் கொடுத்து அவற்றின் பயன்களை விளக்கினார்.

யோகா பயிற்சியாளர் சுபாஷினி விஜயகுமார்,

“யோகா என்பது நோய்களைத் தடுக்கும் இயற்கையான வாழ்க்கை முறை. உடலின் அனைத்து உறுப்புகளையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க யோகா பெரிதும் உதவுகிறது. நமது உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக பராமரித்தால், நமது மறைவுக்குப் பின்னரும் உறுப்பு தானம் மூலம் தேவைப்படுவோருக்கு வாழ்வளிக்க முடியும். ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையும் அந்த உயர்ந்த தருணத்தில், நமது உறுப்புகள் மற்றொருவரின் வாழ்வில் ஒளியேற்றும். எனவே உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வும், யோகா பயிற்சியும் ஒன்றோடொன்று தொடர்புடையவை” என வலியுறுத்தினார்.

காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெற்ற யோகா பயிற்சியில் அனைத்து வயதினரும் உற்சாகமாக பங்கேற்று பயனடைந்தனர். பின்னர் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சமாஜ தலைவர் ஆர். அசோகன், பொதுச் செயலாளர் வி. ராஜேந்திரன், பொருளாளர் ஏ. ரங்கநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

“யோகா செய்வோம்… ஆரோக்கியமாக வாழ்வோம்!” என்ற விழிப்புணர்வு முழக்கத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

மேலும் படிக்க