June 18, 2026
தண்டோரா குழு
கோவை பி.எஸ்.ஜி ஹெல்த் சயின்சஸ் கல்வி நிறுவனங்கள் (PSG Health Sciences Institutions) சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பான ‘கோட் கிளப் 2026’ (COAD CLUB – Club of Anti-Drug) தொடக்க விழா பி.எஸ்.ஜி ஐ.எம்.எஸ்.ஆர் (PSG IMSR) கலையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் கண்ணன்,IPS மற்றும் கோவை வடக்கு துணை காவல் ஆணையர் N.தேவநாதன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இவர்களுடன், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் போதைப்பொருள் விழிப்புணர்வுக்காகவும் 500 கிலோமீட்டர் தூரம் தொடர் மிதிவண்டிப் பயணம் மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனை படைத்த சாதனையாளர் ஜி.டி. விஷ்ணு ராம் அவர்களுக்கு விழாவில் சிறப்பான முறையில் பாராட்டும் கௌரவமும் வழங்கப்பட்டது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, ‘கோட் கிளப் 2026’ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டதுடன், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான பிரத்யேக ‘பெண்கள் பாதுகாப்பு SOS செயலி’ (Women Safety SOS App) அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், மாணவர்களிடையே நடத்தப்பட்ட கவிதை மற்றும் போஸ்டர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டதோடு, போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விழிப்புணர்வு உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர்.