• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜம்மு காஷ்மீரில் நடந்த சண்டையில் 2 பேர் பலி 2 பேர் காயம்

February 4, 2017 தண்டோரா குழு

எல்லை பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர்.

இது குறித்து பாதுகாப்புபடை அதிகாரி கூறியதாவது:

“வட காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 4) எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர்.

பாரமுல்லா மாவட்டத்தில் அமர்கர் பகுதியில் தீவிரவாதிகள் ஒளிந்து கொண்டுள்ளனர் என்று தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லை பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் நடத்தினர். அந்த தேடுதலின் போது இருதரப்பினருக்கு இடையே நடந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் உயிரிழந்தனர். அவர்கள் எந்த தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.

இந்தச் சண்டையில் காவல்துறை ஆய்வாளர் மற்றும் மற்றொரு அதிகாரியும் காயமடைந்தனர். ஏகே ரக துப்பாக்கி, சாதாரண துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் சண்டை நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க