• Download mobile app
10 Jun 2026, WednesdayEdition - 3773
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வி , கோவை, திருப்பூர் மற்றும் வேலூரில் 5 ஜி சேவைகளைத் தொடங்கியது

June 10, 2026 தண்டோரா குழு

வி தனது வாடிக்கையாளர்களின் மீது கொண்டுள்ள அக்கறை மற்றும் அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக திட்டமிடப்பட்ட இந்த 5G சேவையின் ஆரம்பம், அதிகளவில் டேட்டா பயன்பாட்டுத் தேவைகளைக் கொண்ட இடங்களை மையமாகக் கொண்டுள்ளது.

இதன்படி, முக்கிய தொழில்துறை மையங்களான கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர், அத்துடன் மருத்துவம் மற்றும் கல்வியில் முக்கியத்துவமுள்ள மையமான வேலூர் ஆகிய பகுதிகள் இந்த 5ஜி சேவை விரிவாக்கத்தில் இடம்பெற்றுள்ளன. இது இந்த நகரங்களில் வசிப்பவர்கள் மற்றும் இங்கு வந்து செல்பவர்களின் டேட்டா பயன்பாட்டை நிறைவு செய்யும்.

இந்த சேவையின் அறிமுகம் மூலம், வி நிறுவனம் இந்த மூன்று நகரங்களிலும் அதிவேக டேட்டா சேவைகளுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்து, அதன் மூலம் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்கள், முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் உற்பத்தி மையங்களில் தடையற்ற மற்றும் மேம்பட்ட நெட்வொர்க் அனுபவத்தை வழங்குவதற்கு ஏற்றவகையில் இந்த 5ஜி கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

வி நிறுவனத்தின் 5ஜி சேவை விரிவாக்கம் குறித்து, வி நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டத்தின் வணிகத் தலைவர் சாய் வெங்கடராமன் கூறுகையில்,

“முக்கிய சந்தைகளில் எங்களது செயல்பாடுகளை தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், வி நிறுவனத்தின் 5 ஜி நெட்வொர்க் விரிவாக்கத்தை நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம். சென்னை, புதுச்சேரி யூனியன் பிரதேசம், திருச்சி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் வெற்றிகரமாகத் தொடங்கியதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த 5ஜி சேவையின் விரிவாக்கம், எங்களது பயணத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகும்.

அதிகளவிலான டேட்டா பயன்பாடுகளைக் கொண்ட மையங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா, வணிகத் தலங்கள் உட்பட அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டே எங்களது இந்த விரிவாக்கம் அமைந்துள்ளது. இது எங்களது வாடிக்கையாளர்களுக்கு நிலையான மற்றும் மேம்பட்ட நெட்வொர்க் அனுபவத்தை உறுதியாக வழங்கும்.” என்றார்.

மேலும் படிக்க