• Download mobile app
25 Apr 2026, SaturdayEdition - 3727
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ட்ராய் தரவுகளின்படி, வி நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக நிகர சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது!

April 25, 2026 தண்டோரா குழு

சமீபத்தில் ட்ராய் தொலைத்தொடர்பு சந்தாதாரர்கள் பற்றிய தரவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, வி நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக நிகர சந்தாதாரர்கள் சேர்க்கை குறித்து பதிவு செய்துள்ளது.

2026 மார்ச் மாத அறிக்கையின்படி, வி நிறுவனம் 1,02,899 சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. முன்னதாக, 2026 பிப்ரவரியில் 21,927 நிகர சந்தாதாரர்களைப் பெற்றிருந்தது. இது அந்நிறுவனத்தின் சந்தாதாரர் எண்ணிக்கை நிலையாக அதிகரித்துவருவதன் ஆரம்ப அறிகுறிகளை வெளிக்காட்டுகிறது.

மார்ச் மாதத்தில், இந்நிறுவனம் 1,92,211 கிராமப்புற சந்தாதாரர்களைப் பெற்றிருப்பது கிராமப்புறங்களிலும் வி நிறுவனத்திற்கு கிடைத்துவரும் வரவேற்பை உணர்த்துகிறது. மார்ச் மாதத்தில், வி நிறுவனம் 15 வட்டங்களில் குறிப்பிடத்தக்க சந்தாதாரர் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது: அஸ்ஸாம் (14,496), பீகார் (57,452), குஜராத் (1,01,748), ஹரியானா (23,725), ஹிமாச்சல பிரதேசம் (4,112), ஜம்மு காஷ்மீர் (7,875), கர்நாடகா (1,00,701), கேரளா (27,082), கொல்கத்தா (4,219), மகாராஷ்டிரா (19,272), மும்பை (14,702), ஒடிசா (17,717), பஞ்சாப் (17,097), தமிநாடு (42,455) மற்றும் உத்தரப் பிரதேசம்-கிழக்கு (47,869) என வி நிறுவனம் சந்தாரர்களைப் பெற்றுள்ளது.

இந்த வளர்ச்சியானது வி நிறுவனத்தின் தொடர்ச்சியான நெட்வொர்க் முதலீடுகள் மற்றும் மாறிவரும் தயாரிப்பு உத்திகளைப் பிரதிபலிக்கிறது. இந்நிறுவனத்தின் தனித்துவமான சலுகைகளான ‘நான்ஸ்டாப் ஹீரோ’ அன்லிமிடெட் 4ஜி டேட்டா மற்றும் ‘சூப்பர் ஹீரோ’ அரை நாள் அன்லிமிடெட் 4ஜி மற்றும் தற்போது நடைபெற்று வரும் 5ஜி விரிவாக்கம் ஆகியவை வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளன. மேலும், மே 2026-க்குள் தனது 5 ஜி சேவையை மேலும் 90 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்து, மொத்த 5ஜி சேவைகளை 133 நகரங்களுக்கு உயர்த்தப் போவதாக வி சமீபத்தில் அறிவித்துள்ளது. இதற்கான 5ஜி சேவைகளை வழங்கும் பணிகளையும் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க