• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜி ஸ்கொயர் குழுமம் சார்பில் கோவை சூலூர், கலங்கலில் ‘ஜி ஸ்கொயர் தி பாரடைஸ்’ பிரீமியம் வீட்டு மனை திட்டம் அறிமுகம்

March 13, 2026 தண்டோரா குழு

இந்தியாவின் மிகப்பெரிய பிளாட்டெட் டெவலப்பரான ஜி ஸ்கொயர் தனது 117-வது திட்டமான ‘ஜி ஸ்கொயர் தி பாரடைஸ்’ என்ற பிரீமியம் வீட்டுமனைத் திட்டத்தை கோயம்புத்தூரில் சூலூர், கலங்கல் பகுதியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

32.58 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் திட்டத்தில் 676 வில்லா மனைகள் திட்டமிடப்பட்டுள்ளன. ‘ஜி ஸ்கொயர் தி பாரடைஸ்’ வீட்டுமனைத் திட்டமானது தங்களது கனவு இல்லங்களை வாங்குபவர்களுக்கும், நீண்ட கால முதலீட்டை மேற்கொள்ள விரும்பும் முதலீட்டாளர்களுக்கும் ஏற்ற வகையில் மிகவும் பாதுகாப்பான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட குடியிருப்பு சமூகத்தை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள சூலூர், கலங்கல் பகுதியில் அமைந்துள்ள ‘ஜி ஸ்கொயர் தி பாரடைஸ்’ வீட்டுமனைத் திட்டம், மாநகரின் இதரப் பகுதிகளுடன் இணைக்கும் போக்குவரத்து வசதிகளையும் அத்தியாவசிய சமூகக் கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது. இத்திட்டமானது, கலங்கல் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலும், அனுக்ரஹா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலும், விமானப்படைப் பள்ளியில் இருந்து 6.8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.இதனால் குடும்பங்களுக்கு ஏற்ற செளகரியமான, மிகவும் வசதியான குடியிருப்புப் பகுதியாக அமைந்திருக்கிறது.

சட்டப்பூர்வமாகச் சரிபார்க்கப்பட்ட ஆவணங்களுடன், உடனடியாக வீடு கட்டக்கூடிய நிலையில் இந்த மனைகள் வழங்கப்படுவதால், வீடு கட்ட விரும்புபவர்களும், நீண்ட கால முதலீடு செய்ய விருப்பமுள்ளவர்களும் எவ்விதச் சிரமமுமின்றி இவற்றை வாங்க முடியும்.

’ஜி ஸ்கொயர் தி பாரடைஸ்’ பிரீமியம் வீட்டுமனைத் திட்டம் குறித்து ஜி ஸ்கொயர் குழுமத்தின் நிறுவனரும் மற்றும் நிர்வாக இயக்குநருமான பாலா ராமஜெயம் கூறுகையில்,

’ஜி ஸ்கொயர் தி பாரடைஸ்’ திட்டமானது, கோயம்புத்தூரில் எங்கள் வளர்ச்சி மற்றும் விரிவாக்க செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. குறிப்பாக சூலூர், கலங்கல் போன்ற மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் குடியிருப்பு மனைகளுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அத்தியாவசியக் கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த குடியிருப்பு சமூகத்தில், உடனடியாக வீடு கட்டத் தகுந்த மனைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம்.

மாநகரின் முக்கியப் பகுதிகளை இணைக்கும் சிறப்பான போக்குவரத்து வசதிகள் மற்றும் மாநகரின் முக்கியப் பகுதிகளுக்கு மிக அருகில் இருக்கும் அதன் அமைவிடம் காரணமாக இத்தகைய இடங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியை எட்டும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.

டிடிசிபி மற்றும் ரேரா அங்கீகாரம் பெற்ற, ’ஜி ஸ்கொயர் தி பாரடைஸ்’ திட்டத்தில் உயர்தர குடியிருப்பு வில்லா பிளாட்கள், முதல் 100 முன்பதிவாளர்களுக்கு மட்டுமே, ஒரு சென்ட் ரூ. 4.9 லட்சம் முதல் வழங்கப்படுகின்றன. இது சுற்றியுள்ள பகுதிகளின் தற்போதைய சந்தை விலையை விடக் குறைவானதாகும். உடனடியாக வீடு கட்டத் தகுந்த இந்த வீட்டுமனை திட்டத்தில், ‘ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட்’ மூலம் வீடுகளை எளிதாகக் கட்டி முடிப்பதற்கான கட்டுமான உதவிகளையும் ஜி ஸ்கொயர் குழும நிறுவனம் வழங்குகிறது.

மேலும் படிக்க