• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து கோவையில் வியாபாரிகள் சங்கப் பேரவை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

March 13, 2026 தண்டோரா குழு

வணிக பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் கள்ளச்சந்தை விற்பனையை கண்டித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் சார்பில் கோவையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மண்டல தலைவர் பி.சுதர்சன் தலைமை தாங்கினார்.வணிகத்திற்கு பயன்படும் சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவி வருவதால் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும்,சில இடங்களில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை நடைபெறுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.

மேலும்,பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் எல்.பி.ஜி. சிலிண்டர்கள் தட்டுப்பாடு இல்லாமல் சீராக விநியோகிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் தங்கசாமி, மாநில செயலாளர் வேதநாயகம், கரூர் மாவட்ட மாநில துணைத் தலைவர் முருகேசன்,மேற்கு மண்டல தலைவர் சக்திவேல்,திருப்பூர் மாவட்ட தலைவர் ஆத்திச்செல்வன்,கரூர் மாவட்ட தலைவர் ஹைகோர்ட் முத்து,கரூர் மாவட்ட பொருளாளர் ஜஸ்டின்,கிழக்கு மாவட்ட தலைவர் ஜெபதுரை,மேற்கு மாவட்ட தலைவர் ஜெயமுருகன்,தெற்கு மாவட்ட தலைவர் சேர்மகனி,வடக்கு மாவட்ட தலைவர் கிஷோர்,ஆலந்துறை கிளை தலைவர் வள்ளல் கருணாகரன்,செல்வபுரம் தலைவர் விஜி மணி, பெரியநாயக்கன்பாளையம் பாபு அய்யாதுரை, துடியலூர் கிளை தலைவர் கணபதி ராமன், சூலூர் ஒன்றிய தலைவர் ஜபத்துரை,ஒத்தக்கால் மண்டபம் கிளை தலைவர் லிங்கராஜ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க