• Download mobile app
10 Mar 2026, TuesdayEdition - 3681
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பங்கு சந்தை வளர்ச்சியுடன் கூடிய வாழ்நாள் முழுவதும் உத்தரவாத வருமானம் அளிக்கும் ‘சுப் ப்ளெக்ஸி பென்ஷன் திட்டம்’ : டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் அறிமுகம்

March 10, 2026 தண்டோரா குழு

நீங்கள் இருக்கும் காலம் வரை உங்கள் வருமானம் தொடர்ந்து வரும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஓய்வு பெறும்போது உங்கள் சேமிப்பு உங்களுக்கு நிலையான வருமானத்தை தருவதோடு மட்டுமின்றி, உயர்ந்து வரும் விலைவாசியை சமாளிக்கவும், எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக வாழவும் உதவும் வகையில் வளர்ச்சி அடைய வேண்டும்.

அதை கருத்தில் கொண்டு டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், ‘சுப் ப்ளெக்ஸி பென்ஷன் திட்டம்’ என்னும் புதிய அறிமுகத்தின் மூலம் இந்தக் கனவை நனவாக்கியுள்ளது. இது நீங்கள் நம்பிக்கையுடனும், நிதிப் பாதுகாப்புடனும் ஓய்வு பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஓய்வுக்காலத் திட்டமிடல் என்பது இனி எதிர்காலத்திற்காக சேமிப்பது மட்டும் அல்ல; அது வாழ்க்கையின் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வதாகும். மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பது மற்றும் மருத்துவச் செலவுகள் உயர்ந்து வருவது போன்றவற்றால், ஓய்வு பெற்றவர்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

பலர் தங்கள் வாழ்க்கை முறையையும் நிதி சுதந்திரத்தையும் தக்கவைத்துக்கொள்ள விரும்புவதால், நிலையான வருமானம் மற்றும் வளர்ச்சி இரண்டையும் வழங்கும் புத்திசாலித்தனமான திட்டங்களை தேடுகிறார்கள். இன்று பல ஓய்வூதியதாரர்கள் கார் வாங்குவது அல்லது வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வது போன்ற ஆடம்பரமான விஷயங்களைச் செய்ய விரும்புகிறார்கள். சிறு வயதிலேயே ஓய்வுபெற நினைப்பவர்கள், தொழில்முனைவோராக விரும்புபவர்கள் அல்லது வேலை மாறுபவர்கள் என யாராக இருந்தாலும், அவர்களுக்குப் பழைய முறையிலான ஓய்வூதியத் திட்டங்கள் இனி போதுமானதாக இருக்காது.

எல்லாவற்றிற்கும் மேலாக, வாழ்நாள் முடிவதற்குள்ளாகவே சேமிப்பு தீர்ந்துவிடுமோ என்ற பயம் பலருக்கும் ஒரு கவலையாக இருக்கிறது.ஆனால், ஓய்வுக்காலம் என்பது தொடர்ந்து ஒரு மன அழுத்தமாகவே இருக்க வேண்டியதில்லை என்றால் எப்படி இருக்கும்? உங்களுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைப்பதோடு, சந்தை சார்ந்த வளர்ச்சி வாய்ப்புகளின் பலனையும் நீங்கள் பெற்றால் எப்படி இருக்கும்?அதை பூர்த்தி செய்ய ‘சுப் ப்ளெக்ஸி பென்ஷன் திட்டம்’ கைகொடுக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம், நீங்கள் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் ஒருங்கே அனுபவிக்க முடியும். அதாவது, நீங்கள் விரும்பும் வாழ்க்கை முறையை விட்டுக்கொடுக்காமல், வசதியாகவும் நம்பிக்கையுடனும் ஓய்வு பெறுவதை இது உறுதி செய்கிறது.

டாடா ஏஐஏ நிறுவனத்தின் மாற்று வளர்ச்சி மற்றும் வளர்ந்து வரும் பிரிவுகளுக்கான தலைவர் மற்றும் தலைமை வினியோக அதிகாரி ஜீலானி பாஷா கூறுகையில்,

“இந்தியாவில் ஓய்வுக்காலத் திட்டமிடல் மாறி வருகிறது. அதிக ஆயுட்காலம், அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள் மற்றும் ஏற்ற இறக்கமான வட்டி விகிதங்கள் ஆகியவற்றால், மக்கள் நிலையான வருமானத்தை அளிப்பது மட்டுமின்றி, அவர்களுடனேயே வளரக்கூடிய திட்டங்களையும் எதிர்பார்க்கிறார்கள். சுப் ப்ளெக்ஸி பென்ஷன் திட்டம் என்பது அதற்கான எங்கள் பதிலாகும் — இது வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதமான வருமானத்தையும், அவர்களின் சேமிப்பை வளர்ப்பதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது,” என்றார்.

சுப் ப்ளெக்ஸி பென்ஷன் திட்டம் வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது. அதோடு, 40 சதவீதம் வரையிலான பங்குச்சந்தை முதலீட்டின் மூலம் சந்தை சார்ந்த வளர்ச்சியையும் கூடுதல் நன்மையாகப் பெறலாம்.

மேலும் படிக்க