• Download mobile app
17 Jan 2026, SaturdayEdition - 3629
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘தயவு செய்து வளர்ந்திடுங்கள்’ என்னும் புதிய சாலை பாதுகாப்பு பிரச்சாரம்: உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி துவக்கியது

January 17, 2026 தண்டோரா குழு

இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான சாலை விபத்து உயிரிழப்புகளுக்குப் மனிதத் தவறுகளே முக்கியக் காரணமாக உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக, உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி ‘‘தயவுசெய்து வளர்ந்திடுங்கள்’’ என்ற புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

இந்தப் பிரச்சாரம் குறித்து உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி லக்ஷ்மன் வேலாயுதம் கூறுகையில்,

சாலை விபத்துகளுக்குக் காரணமாக அமையும்,ஆனால் நாம் அதிகம் கவனிக்காத விஷயமான ‘முதிர்ச்சியற்ற மற்றும் பொறுப்பற்ற நடத்தைகளை’ மாற்றுவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இந்த பிரச்சாரத்தை நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் இவ்வங்கி மேற்கொள்ள இருக்கிறது. சாலை விபத்துகளுக்கு பெரும்பாலும் சரியான சாலைகள் இல்லாமை அல்லது வாகனத்தில் ஏற்படும் பிரச்சினைகள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், உண்மையில் பெரும்பாலான உயிரிழப்புகள் நம்மால் தவிர்க்கக்கூடிய மனிதத் தவறுகளாலேயே ஏற்படுகின்றன.

அதிவேகம்,சிக்னலை மதிக்காமல் செல்வது, கவனச் சிதறல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மற்றும் அடிப்படை பாதுகாப்பு விதிகளை மதிக்காதது போன்றவைகளாலே ஏற்படுகிறது. மக்கள் தங்கள் அன்றாட வாகனம் ஓட்டும் பழக்கத்தை சுயபரிசோதனை செய்துகொள்ளவும், பொறுப்புடன் நடந்து கொள்ளவும் ஊக்குவிப்பதே இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும். சாலைகளில் அலட்சியமாக இருப்பது தைரியமானதோ அல்லது ‘கூல்’ ஆன விஷயமோ அல்ல; அது உண்மையில் ஒரு ‘குழந்தைத்தனமான செயல்’ என்பதை இந்த பிரச்சாரம் கூறுகிறது.

பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களைக் குழந்தைகளுடன் ஒப்பிட்டு, மழலை மொழி மற்றும் குழந்தைகளுக்கான படங்களைப் பயன்படுத்தி நகைச்சுவையாகவும் கிண்டலாகவும் இது எடுக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் பொறுப்பின்றி நடப்பது எவ்வளவு பொருத்தமற்றது என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. குறும்படங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம், ஒருவரின் அலட்சியமான முடிவு எப்படி அப்பாவிகளின் வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதையும் இது விளக்குகிறது. “சாலை விதிகளை மீறும்போது நீங்கள் ஒரு குழந்தையைப் போல நடந்து கொள்கிறீர்கள், நீங்கள் வளர்ந்து முதிர்ச்சியடைய வேண்டிய நேரம் இது” என்ற எளிய உண்மையை ஒவ்வொரு பதிவும் ஆணித்தரமாகச் சொல்கிறது.

சாலைப் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, உள்ளாட்சி மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த வாரம் பல நகரங்களில் நேரடி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. சாலைகளில் பொறுப்புடன் நடந்து கொள்வது மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த செய்தியை நாடு முழுவதும் கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க