January 14, 2026
தண்டோரா குழு
தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு திராவிட பொங்கல் பரிசு கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க,மேற்கு மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் ஆலோசனை படியும், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.ஆர்.ரவி மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மூலனூர் கார்த்தி ஆகியோரின் வழிகாட்டுதல் படியும் கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையாபுரி நகரில் தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களின் 300 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களான வெல்லம், பச்சரிசி, கரும்பு, நெய்,முந்திரி திராட்சை அடங்கிய பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசு தொகையை கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் வழங்கினார்.