• Download mobile app
13 Jan 2026, TuesdayEdition - 3625
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா

January 13, 2026 தண்டோரா குழு

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக கட்சி கோவை மண்டலம் சார்பில்,சமத்துவ பொங்கல் விழா இந்திய ஜனநாயக கட்சி கோவை மண்டலம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நலத்திட்ட உதவிகள் ஆலம் பசுமை பண்ணையில் உள்ள ஐ.ஜே.கே மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் மற்றும் இளைய வேந்தர் ரவி பச்சைமுத்து அவர்களின் வழிகாட்டுதலின்படி – மாநில இணைப் பொதுச் செயலாளர் திருமதி லீமாரோஸ் மார்ட்டின் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இவ்விழாவில் சுமார் சுமார் 300-க்கும் மேற்பட்ட மகளிர் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று குலவை குரல் எழுப்பினார்கள்.சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அரிசி, பருப்பு, சமையல் ஆயில், நாட்டு சக்கரை, போர்வை போன்ற பொருள்கள் அடங்கிய நல உதவிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கி லீமாரோஸ் மார்டின் விழாப்பேருரை ஆற்றினார். அனைவருக்கும் சமபந்தி மதிய உணவு வழங்கப்பட்டது.

விழா நிறைவாக கோலாட்டம், கும்மியாட்டம், உறியடி போன்ற சமுதாய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.இவ்விழாவில் ஐ.ஜே.கே”வின் மூத்த நிர்வாகிகள் வழக்கறிஞர் ராபின்சன், முத்துச்செல்வம், மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட தலைவர் அந்தோணிசாமி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி மாவட்டத் தலைவர் மணிமாறன், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி மாவட்ட தலைவர் ஈஸ்வரன், செயலாளர் பொற்காலம் ராஜா, வடக்கு சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் திருக்கண்ணன், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி மாவட்ட தலைவர் செபஸ்டின், ஜனார்த்தனன், மகளிர் அணி நிர்வாகிகள் ஸ்டெல்லா, குளோரி ஜான் பிரிட்டோ, ராணி, அமுதா,சேலம் ராணி, லெனின், பாஸ்டின் மற்றும் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க