• Download mobile app
12 Jan 2026, MondayEdition - 3624
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வணிகவியல் துறையில் தற்போது ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது – கோவை வருமான வரித்துறை தலைமை ஆணையர் தகவல் !

January 12, 2026 தண்டோரா குழு

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் வணிக வல்லுநர்கள் மேம்பாட்டு மையம் மற்றும் வணிகவியல் துறை,இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனம்,இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனம், இந்திய செலவுக் கணக்கறிஞர்கள் நிறுவனம் மற்றும் பட்டயச் சான்றளிக்கப்பட்ட கணக்கறிஞர்கள் சங்கம் போன்ற பல்வேறு தொழில்முறை அமைப்புகள் இணைந்து, தொழில் முறை நிபுணர்கள் மாநாடு ஜி.ஆர்.ஜி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற விழாவில்,கல்லூரியின் செயலர் டாக்டர் யசோதா தேவி அனைவரையும் வரவேற்று பேசினார். மாநாட்டின் துவக்க விழாவில் தலைமை விருந்தினராக கோவை வருமான வரித்துறை தலைமை ஆணையர் அருண் சி.பரத்,கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

வணிகவியல் துறையில் தற்போது ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக கூறிய அவர்,குறிப்பாக பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறினார்.வணிகவியல் சார்ந்த கல்வி பயின்றவர்களுக்கு நிறுவன செயலர்,சட்ட நிபுணத்துவம்,இன்சுரன்ஸ் துறைகள்,மத்திய மாநில அரசு வேலை வாய்ப்புகள் என ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கல்வி பயிலும் போதே துறை சார்ந்த திறன்களை வளர்த்தி கொள்வதில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்த அவர்,அன்றாடம் தேசிய,சர்வதேச வணிக மாற்றங்களை கண்காணித்து செயல்பட மாணவர்கள் தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் தொடர்ந்து மாறி வரும் நவீன தொழில் நுட்பங்களை குறிப்பாக செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில் நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்றவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக மாநாட்டில் ஐசிஏஐ-யின் எஸ்ஐஆர்சி மண்டலக் குழு உறுப்பினர் ராஜேஷ், ஐசிஏஐ -கோவை கிளையின் தலைவர் சதீஷ், ஐசிஎஸ்ஐ,கோயம்புத்தூர் கிளையின் தலைவர் சசகுந்தலா, ஐசிஎம்ஏஐ கோயம்புத்தூர் கிளையின் தலைவர் மகேஸ்வரன் மற்றும் பெங்களூருவில் உள்ள குளோபல் எஃப்டிஐ நிறுவனர் நாராயணன் நம்பியார்,ஆகியோர் வணிகவியில் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து பேசினர்.

புகழ்பெற்ற தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் முன்னாள் மாணவர் தொழில் வல்லுநர்கள், தங்களின் நிபுணத்துவத்தை வணிகவியல் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டு, கல்விசார் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இதில் வணிகவியல் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 3000 மாணவர்கள், தொழில்முறைத் தகுதி பெற்ற 200 முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில்முறைப் படிப்புகளைப் பயிலும் 350 மாணவர்கள் பங்கேற்றனர்.நிகழ்வில், கல்லூரியின் முதல்வர் முனைவர் டாக்டர் ஹாரத்தி நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க