December 22, 2025
தண்டோரா குழு
சாதகமான பொருளாதாரச் சூழல், மேம்பட்ட பணப்புழக்க நிலைமைகள் மற்றும் அதன் பன்முகப்படுத்தப்பட்ட சில்லறை வர்த்தகம் ஆகியவற்றின் காரணமாக உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, நடப்பு ஆண்டில் சிறப்பான வளர்ச்சியை எட்டி உள்ளது.
பாதுகாப்பான கடன் வழங்குதலில் வலுவான விரிவாக்கம், நிலையான வைப்புத்தொகை திரட்டல் மற்றும் டிஜிட்டல் மற்றும் செயல்பாட்டுத் திறனில் தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவற்றின் மூலம் வங்கி சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. குறைந்த வட்டியில் வீட்டு கடன், மைக்ரோ-மார்ட்கேஜ், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன், தங்க நகைக் கடன், வாகன நிதி மற்றும் விவசாய கடன் போன்ற பாதுகாப்பான கடன் பிரிவுகளில் வங்கி சீரான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
மேலும் இவ்வங்கி தனது வைப்புத்தொகை பிரிவிலும் தொடர்ந்து நிலைத்தன்மையை மேம்படுத்தி வருகிறது. வலுவான சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கில் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்தல் மற்றும் சில்லறை கால வைப்புத்தொகையின் அதிகரிப்பு, வங்கியின் பணப்புழக்க நிலையை வலுப்படுத்தியது. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சிகள், கிளைகளின் மேம்பட்ட செயல்பாட்டுத் திறன் மற்றும் எளிமையான டிஜிட்டல் வங்கிச் சேர்க்கை முறைகள் ஆகியவை வங்கியின் வைப்புத்தொகை இருப்பை மேலும் வலுப்படுத்தின.
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் தலைமை நிதி அதிகாரி சதானந்த் பாலகிருஷ்ண காமத் கூறுகையில்,
2025-ல் நிதிச் சேவைத் துறையில் நிலவிய ஒட்டுமொத்த கடன் சூழல், இடர் அளவீடுகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. வலுவான கடன் மதிப்பீட்டுத் தரநிலைகள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட கடன் புத்தகம் ஆகியவை சிறந்த சொத்து தரம் மற்றும் ஒட்டுமொத்த போர்ட்போலியோ நிலைத்தன்மைக்கு பங்களித்தன. மேம்படுத்தப்பட்ட மொபைல் பேங்கிங் வசதிகள், தானியங்கி சேவைகள் மற்றும் தரவு அடிப்படையிலான கடனை முடிவு செய்யும் கருவிகள் என எங்களின் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர் பிரிவுகளில் அதிகரித்த டிஜிட்டல் பயன்பாடு, செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்தி சேவை அனுபவத்தை உயர்த்தி உள்ளது.
செயல்முறை மேம்படுத்தல் மற்றும் கிளை செயல்பாடுகள் ஆகியவை நெட்வொர்க் முழுவதும் செலவு மேலாண்மை முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்தன என்று தெரிவித்தார்.