December 1, 2025
தண்டோரா குழு
நலவாரியங்களுக்கு ஆபத்தான தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்கள் நடைமுறைக்கு உத்தரவு வழங்கிய மோடி அரசைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டிட தொழிலாளர் மத்திய சங்கம், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி பொருளாளர், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி குரூஸ் முத்து பிரின்ஸ் தலைமை தாங்கினார். (சியுஎப்) மாவட்ட செயலாளர் கூட்டமைப்பு சந்திரகுமார் வரவேற்புரை ஆற்றினார். மேற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் முருகன், வடக்கு மாவட்ட தலைவர் ராஜா, மத்திய மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், CUF மாவட்ட தலைவர் செல்வராஜ், துணை தலைவர்கள் முத்துலட்சுமி, ஆறுச்சாமி, CRIC வடக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார், மத்திய மாவட்ட தலைவர் அருள்தாஸ், கிழக்கு மாவட்ட தலைவர் அழகிரி, வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ், மண்டல செயலாளர் அர்ஜுன் ஸ்ரீதர், மண்டல பொருளாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக மாநில தீர்மானக்குழு செயலாளர் நா.கார்த்திக் ExMLA கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் துவக்கிவைத்தார். CUF
மாநில பொதுச் செயலாளர் கவிஞர் குரு. நாகலிங்கம், மாநில பொருளாளர் லயன் B.K.ஆறுமுகம், மாநில அமைப்பு செயலாளர் C. V அழகு, CRIC மாநில இணை செயலாளர் பொறியாளர் R.ராஜதுரை, கட்டட தொழிலாளர் மத்திய சங்கம் மாநில துணை தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்.
இதில், ராலேந்திரன், கவிதா, பத்மா, அசோக், ரமா கண்ணன், வில்லியம்ஜோஸ், பூர்ணிமா, ஆனந்த், கார்த்திக், வினோதினி, மகேஸ்வரி, கமர்பாஷா, குரூஸ் மேரி, பாண்டியன், பரத்ராஜ், பர்வேஸ், CRIC மாவட்ட நிர்வாகிகள் கவியரசு, ஹரிஹரன், சின்னசாமி, ஜான், கலையரசி, சிவகாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.