November 20, 2025
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட், பங்கு சார்ந்த மற்றும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மற்றும் பொருட்கள் அடிப்படையிலான இடிஎஃப்களின் அலகுகளில் முதலீடு செய்யும் ஒரு திறந்த-முடிவு ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்கள் திட்டமான ஆக்சிஸ் மல்டி-அசெட் ஆக்டிவ் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் இன் வெளியீட்டை அறிவித்தது.
இந்த புதிய நிதி வழங்கல் நவம்பர் 21அன்று சந்தாவிற்குத் தொடங்கி டிசம்பர் 5, 2025 அன்று முடிவடையும்.பங்கு, கடன், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை ஒரே அறிவார்ந்த முறையில் நிர்வகிக்கப்படும் முதலீட்டுக் கலவையில் ஒருங்கிணைக்கின்ற ஆக்ஸிஸ் மல்டி-அசெட் ஆக்டிவ் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் ஆனது முதலீட்டாளர்களுக்கு பல-சொத்து பல்வகைப்படுத்தலுக்கான ஒரு ஒற்றை-சாளர தீர்வை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி, ஒரு வலுவான அளவீட்டு மாதிரி மற்றும் ஒரு உள் அமைந்த குழுவின் வழிகாட்டுதலின்படி, சொத்து வகுப்புகள் மற்றும் கருப்பொருள்கள் முழுவதும் மாறுபடும் வகையில் ஒதுக்கீடு செய்வதன் மூலம் நீண்ட கால மூலதன மதிப்புக் கூடுதலை வழங்குவதற்கு இந்த ஃபண்ட் நோக்கம் கொண்டுள்ளது. இந்த அணுகுமுறை, ஒதுக்கீடு முடிவுகள் மதிப்பீடுகள், பேரியல் குறிகாட்டிகள், சந்தை போக்குகள் மற்றும் பொருட்கள் காரணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இருப்பதை உறுதிசெய்கிறது.
அதே நேரத்தில், புவிசார் அரசியல் வளர்ச்சிகள் மற்றும் மாறிவரும் சந்தை எதிர்பார்ப்புகள் போன்ற அளவிட முடியாத கூறுகளையும் இது கருத்தில் கொள்கிறது. இந்த ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் கட்டமைப்பு முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகிறது. இது ஒரு ஒற்றை நிதி மேலாளர் அல்லது முதலீட்டு பாணியின் மீதான சார்புகளைக் குறைக்கிறது மற்றும் வரி தாக்கங்கள் இல்லாமல் விரைவாகவும் பயனுள்ள வகையில் சீரமைக்கும் திறனை வழங்குகிறது. சந்தை சுழற்சிகள் முழுவதிலும் நல்ல வருவாயைப் பெறும் திறனை மேம்படுத்துகிறது இது ஒவ்வொரு சொத்து வகைக்குள்ளும் உள்ள வாய்ப்புக்களின் ஒரு பரந்த வரம்பிற்கான அணுகலையும் வழங்குகிறது. இந்த கட்டமைப்பைப் பயன்படுத்தி, நீண்டகால செல்வ உருவாக்கத்திற்கு மிகவும் பயனுள்ள மற்றும் நெகிழ்வான தீர்வாக இதை அமைக்கின்ற வகையில் கூடுதல் வரிச் செலவுகளுடன் முதலீட்டாளர்களுக்கு சுமையை ஏற்படுத்தாமல், செயல்திறன் மிக்க கருப்பொருள்களுக்கு இடையே மாறும் தன்மையுடன் இயங்கவும், ஒதுக்கீட்டை உகந்ததாக்கவும் இந்த ஆக்சிஸ் மல்டி-அசெட் ஆக்டிவ் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் ஆல் முடிகிறது.
இந்த வெளியீடு குறித்து பேசிய ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கோப்குமார் கூறுகையில்,
“தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கு முதலீட்டாளர்களுக்கு அதிகாரம் அளிக்கின்ற வகையில் புதுமையான தீர்வுகள் மூலம் முதலீட்டை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கு ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் உறுதிப்பாட்டுடன் உள்ளது. இந்த நோக்கில், பல தயாரிப்புகளை நிர்வகிக்கும் சிக்கலான தன்மை இல்லாமல் பல்வகைப்படுத்தப்பட்ட முதலீட்டை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஆக்சிஸ் மல்டி-அசெட் ஆக்டிவ் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் ஒரு அனைத்தையும் உள்ளடக்கிய தீர்வு ஆகும்.
பங்கு, கடன் மற்றும் வணிகப் பொருட்கள் ஆகியவற்றை மாறுகின்ற வகையில் நிர்வகிக்கப்பட்ட கட்டமைப்பில் இணைப்பதன் மூலம், அலைவுகளைக் குறைக்கின்ற மற்றும் இடர்ப்பாடு சரிசெய்யப்பட்ட வருவாயை மேம்படுத்துகின்ற அதே வேளையில் சந்தை சுழற்சிகளில் முதலீட்டாளர்கள் திறம்பட வழிநடத்துவதற்கு உதவ நாங்கள் நோக்கம் கொண்டுள்ளோம்.”என்று கூறினார்.