• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

28வது ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ தேசிய பந்தய சாம்பியன்ஷிப் 2025 இறுதிப்போட்டி: கோவையில் நவம்பர் 15, 16-ந்தேதிகளில் நடைபெறுகிறது

November 14, 2025 தண்டோரா குழு

இந்தியாவின் பிரபல கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியான ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ தேசிய பந்தய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள், வரும் 15 மற்றும் 16-ந்தேதிகளில் கோவையில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற உள்ளது.

பல மாதங்களாக நடைபெற்ற இந்த பந்தயத்தின் இறுதிப் போட்டிகளில் பல அற்புதங்களையும் சுவாரஸ்யங்களையும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். மேலும் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் விதமாக, அமெரிக்க பந்தய ஜாம்பவான் மற்றும் மூன்று முறை மோட்டோஜிபி உலக சாம்பியனும், மோட்டோஜிபி ஹால் ஆப் பேமில் இடம்பெற்றவருமான ப்ரெடி ஸ்பென்சரும் கலந்து கொள்ள இருக்கிறார்.முதல் முறையாக போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான போட்டிகள் முதல் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக போராடும் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் வரை, இறுதிப் போட்டி அனைத்துப் பிரிவுகளிலும் இருக்கையின் நுனிக்கு கொண்டு செல்வதற்கு உறுதி அளிக்கிறது.

இறுதிப் போட்டி எல்ஜிபி பார்முலா 4, ஜேகே டயர் நோவிஸ் கோப்பை, ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பை மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜேகே டயர் லெவிடாஸ் கோப்பை ஆகிய பிரிவுகளில் நடைபெற உள்ளது. மேலும், இந்திய பந்தய விழா 2025-ன் ஒரு பகுதியாக, எப்ஐஏ-சான்றளிக்கப்பட்ட பார்முலா 4 இந்திய சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கு முந்தைய போட்டியும் நடைபெற உள்ளது.ஜேகே டயர் தேசிய பந்தய சாம்பியன்ஷிப்பில் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒற்றை இருக்கை கொண்ட எல்ஜிபி பார்முலா 4, மிக நீண்ட காலமாக நடைபெற்று வரும் போட்டியாகும்.

இது கார்ட்டிங் மற்றும் பார்முலா பந்தயத்திற்கு இடையே பாலமாக இருந்து வருகிறது. மேலும் இது கார் பந்தயத்திற்கான திறமை, துல்லியம் மற்றும் பந்தயக் கலைக்கான உண்மையான சோதனை போட்டியாகவும் உள்ளது. சுற்று 2க்குப் பிறகு, தில்ஜித் டிஎஸ் (டார்க் டான் ரேசிங்) 53 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார், அதைத் தொடர்ந்து துருவ் கோஸ்வாமி (எம்எஸ்போர்ட் ரேசிங்) 45 புள்ளிகளுடன், மெஹுல் அகர்வால் (டார்க் டான் ரேசிங்) 28 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். இறுதிப் போட்டியில் யார் சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதேபோல் எப்ஐஏ-சான்றளிக்கப்பட்ட பார்முலா 4 இந்திய சாம்பியன்ஷிப்பின் போட்டியில் திறமைமிக்க போட்டியாளர்களான கென்யாவின் ஷேன் சந்தாரியா (சென்னை டர்போ ரைடர்ஸ்), பிரான்சின் சாச்செல் ரோட்ஜ் (கிச்சாஸ் கிங்ஸ் பெங்களூரு),தென்னாப்பிரிக்காவின் லுவிவே சம்புட்லா (கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங்), இந்தியாவின் இஷான் மாதேஷ் (கொல்கத்தா ராயல் டைகர்ஸ்) மற்றும் சைஷிவா சங்கரன் (ஸ்பீட் டெமான்ஸ் டெல்லி) ஆகியோர் களம் இறங்குகின்றனர். ஜேகே டயர் வழங்கும் ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பை, சீசனின் இறுதிச் சுற்றில் சக்திவாய்ந்த ஜிடி-ஆர்650 மோட்டார் சைக்கிளுடன் பந்தய வீரர்கள் முழுமையான போட்டிக்கு தயாராக இருப்பதால் இது அனைவரையும் வெகுவாக கவரும் பந்தயமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

தொழில்முறை பிரிவில், பெங்களூருவைச் சேர்ந்த அனிஷ் ஷெட்டி 57 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார், தற்போதைய சாம்பியன் நவநீத் குமார் (புதுச்சேரி) 36 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், கயான் படேல் (மும்பை) 34 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அமெச்சூர் பிரிவில், பிரையன் நிக்கோலஸ் (புதுச்சேரி) 69 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜோஹ்ரிங் வாரிசா (உம்ராங்சோ) 45 புள்ளிகளுடன் கபீர் சஹோச் (வதோதரா) 33 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்த இரு பந்தயங்களும் ரசிகர்களை வெகுவாக உற்சாகம் அடையச் செய்யும்.

ஜேகே டயர் லெவிடாஸ் கோப்பை, இந்த சீசனில் ஒரே மாதிரியான, செயல்திறன்-டியூன் செய்யப்பட்ட மாருதி சுசுகி இக்னிஸ் கார்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. புதுமுக மற்றும் ஜென்டில்மேன் பிரிவில் 14 திறமையான ஓட்டுநர்களை வெளிக் கொண்டு வந்துள்ளது. இதில், புதுமுக பிரிவில் அஸ்வின் புகழகிரி (மதுரை) மற்றும் பாலாஜி ராஜு (சென்னை) ஆகியோர் 32 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். நிஹால் சிங் (குர்கான்) 27 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார். இதேபோல் ஜென்டில்மேன் பிரிவில், ஜெய் பிரசாந்த் வெங்கட் (கோயம்புத்தூர்) 38 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார். அதைத் தொடர்ந்து ராம் சரண் (28) மற்றும் யோகேஸ்வரன் கிருஷ்ணவேலு (21) ஆகியோர் அதிரடியான இறுதிப் போட்டிக்கு தயாராக இருக்கிறார்கள்.

இந்தியாவின் தொடக்க நிலை ஒற்றை இருக்கை போட்டியான ஜேகே டயர் நோவிஸ் கோப்பை, வளர்ந்து வரும் திறமையாளர்களுக்கு சிறந்த களமாக இருந்து வருகிறது, 2வது சுற்றுக்குப் பிறகு, அபிஜித் வடவள்ளி (மொமெண்டம் மோட்டார்ஸ்போர்ட்ஸ்) 34 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப்பில் முன்னிலை வகிக்கிறார், அதைத் தொடர்ந்து லோகித்லிங்கேஷ் ரவி (டிடிஎஸ் ரேசிங்) 32 புள்ளிகளுடன் மற்றும் பிரதிக் அசோக் (டிடிஎஸ் ரேசிங்) 28 புள்ளிகளுடன் உள்ளனர்.

முதல் மூன்று இடங்களுக்கு இடையில் ஆறு புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளதால், இறுதிப் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த போட்டிகள் அனைத்தும் சனிக்கிழமை 15-ந்தேதி காலை 10.25 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை 16-ந்தேதி காலை 10.40 மணிக்கும் துவங்கி நடைபெற உள்ளது.

மேலும் படிக்க