• Download mobile app
11 Oct 2025, SaturdayEdition - 3531
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக்சஸ் டெக்னோலாஜிஸ் 5ம் ஆண்டு நிறைவையொட்டி‘பசுமை கோயம்புத்தூர்’ திட்டத்திற்கு 5 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கியது

October 11, 2025 தண்டோரா குழு

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொழில்நுட்ப சேவைக்களை வழங்கி வரும் பிக்சஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், தனது 5வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடும் விதமாக ‘பசுமை கோயம்புத்தூர்’ திட்டத்தில் இணையும் வகையில் நகர் முழுவதும் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட உள்ளது.

இந்நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்நுட்பத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகள் மூலம் சமூக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 60 சதுர அடி அறையில் 3 நண்பர்களுடன் துவங்கிய இந்த நிறுவனம் இன்று 75க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிபுணர்களுடன் பிரமாண்ட நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

ஐடி ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வு, டிஜிட்டல் மார்க்கெட்டிங், நிர்வகிக்கப்பட்ட சேவைகள் மற்றும் வணிக வளர்ச்சிக்கான ஆலோசனை ஆகியவற்றில் அதிநவீன தீர்வுகளை வழங்கி வருகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கோகிலா கணேசன், நிர்வாக இயக்குனர் லியோ சர்னி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மாறன் சுப்பிரமணியம் ஆகியோரால் துவக்கப்பட்ட பிக்சஸ், இன்று முன்னணி பொதுத்துறை மற்றும் அரசு வாடிக்கையாளர்களுடன் கூட்டு சேர்ந்து, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலும் செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் குடிமக்கள் சார்ந்த பல்வேறு விஷயங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மிக பிரமாண்ட முறையில் செயல்படுத்தி வருகிறது.

இது குறித்து நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கோகிலா கணேசன் கூறுகையில்,

60 சதுர அடி அறையில் ஏராளமான கனவுகளுடன் துவக்கப்பட்ட எங்கள் நிறுவனம் சிறப்பான வளர்ச்சி அடைந்திருப்பது குறித்து எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. தொழில்நுட்ப உதவியுடன் நாங்கள் வழங்கும் ஒவ்வொரு திட்டமும் மக்களை மேம்படுத்துவதிலும், நிர்வாகத்தை எளிமைப்படுத்துவதிலும், சமூகங்களை வலுப்படுத்துவதிலும் சிறப்பான முறையில் இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்நிறுவனத்தின் 5வது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, பிக்சஸ் டிஜிட்டல் மாற்றத்திலிருந்து சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு தனது கவனத்தை திசை திருப்பி உள்ளது. தொழில்நுட்பத்தை சுற்றுச்சூழலுடன் இணைக்கிறது. தனது சமூக மேம்பாட்டு முயற்சிகள் மூலம், இந்நிறுவனம் உடுமலைப்பேட்டை தளி பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடுவதற்கு வசதி செய்துள்ளது, இது பழங்குடி சமூகம் தலைமையிலான சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் நிலையான வாழ்வாதார திட்டங்களை ஆதரிக்கிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது “பசுமை கோயம்புத்தூர்” திட்டத்தை ஆதரிக்கும் விதமாக ஆண்டு விழா வாரத்தில் கோவை முழுவதும் 5,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்துகிறது. வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்புமிக்க சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டத்தை தாங்கள் முன்னெடுத்துள்ளதாக கோகிலா கணேசன் தெரிவித்தார்.

எங்கள் வெற்றி எங்களை நம்பிய எங்கள் வாடிக்கையாளர்களுக்கும், எங்களுடன் நின்ற பிக்சஸ் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சொந்தமானது என்று கூறிய அவர் “இந்த சாதனை ஒரு முடிவு அல்ல; ஒரு தொடக்கமாகும்’’ என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க