• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘ஸ்கூட்ஸ் ‘எவரிவேர் சேல்’ அறிவிப்பு! – விமானம் பயணம் எங்கும் விற்பனை – இங்கும் அங்கும் செல்ல சலுகை கட்டணம் ரூபாய்.5,900-லிருந்து துவக்கம்

September 11, 2025 தண்டோரா குழு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் துணை நிறுவனமான ஸ்கூட், தனது ‘ ஸ்கூட்ஸ் ‘எவரிவேர் சேல்’ -ஐ அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.

செப்டம்பர் 9 முதல் 14, 2025 வரை நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையின் மூலம், ஸ்கூட்டின் பரந்த நெட்வொர்க்கில் கவர்ச்சிகரமான கட்டணங்களை நீங்கள் பெறலாம்.இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு ஒரு வழிப் பயணத்திற்கான சிக்கன வகுப்பு விமானக் கட்டணம் வெறும் ரூபாய்.5,900-இல் தொடங்குகிறது.

மேலும், அங்கிருந்து ஆசிய-பசிபிக் மற்றும் பிற பிரபலமான இடங்களுக்கும் பயணிக்கலாம். சிறப்புச் சலுகை கட்டணங்கள் இப்போது முன்பதிவு செய்யக் கிடைக்கின்றன! 2025 செப்டம்பர் 23 முதல் 31 ஆகஸ்ட் 2026 வரையிலான பயணங்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும். பாங்காக், மக்காவு, ஒகினாவா, பாடாங், சியோல், சிட்னி மற்றும் பல அற்புதமான இடங்களுக்குப் பயணிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த தள்ளுபடியின் மூலம், அமிர்தசரஸ், சென்னை,திருவனந்தபுரம் மற்றும் பிற இடங்களிலிருந்து வரும் பயணிகள் இப்போது உற்சாகமான இடங்களை சிறந்த விலையில் கண்டறியலாம்.அவற்றில் சில, சென்னை டூ சிங்கப்பூர் செல்ல கட்டணம் ரூபாய்.5,900 முதல், திருச்சி டூ ஃபூக்கெட் செல்ல கட்டணம் ரூபாய் .8,200 முதல், திருவனந்தபுரம் டூ ஜகார்த்தா செல்ல கட்டணம் ரூபாய் 8,500 முதல், விசாகப்பட்டினம் டூ பாலி (டென்பசார்) செல்ல கட்டணம் ரூபாய்9,000முதல், அமிர்தசரஸ் டூ டா நாங் செல்ல கட்டணம் ரூபாய்.11,900 முதல், கோயம்புத்தூர் டூ மெல்போர்ன் செல்ல கட்டணம் ரூபாய் 19,500 முதல் இருக்கும்.

ஸ்கூட் ஏர்லைன்ஸ், சியாங் ராய், ஓகினாவா மற்றும் டோக்கியோ (ஹனேடா) போன்ற புதிய இடங்களுக்கான தனது பயணச் சலுகைகளை கவர்ச்சிகரமான கட்டணங்களில் வழங்குகிறது. இந்தக் கட்டணங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.அமிர்தசரஸ் மற்றும் சென்னை நகரங்களிலிருந்து பயணிக்கும் வாடிக்கையாளர்கள், ஸ்கூட் நிறுவனத்தின் புதிய போயிங் 787 ட்ரீம்லைனர்ஸ் விமானங்களில் பயணத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.

ஸ்கூட் பிளஸ் சேவை இப்போது வெறும் ரூபாய் 14,000 விலையில் கிடைக்கிறது. பலன்களில் முன்னுரிமை செக்-இன் மற்றும் போர்டிங், கூடுதல் கால் வைக்கும் இடம் கொண்ட இருக்கை, 15 கிலோ கேபின் பேக்கேஜ் மற்றும் 30 கிலோ செக்டு பேக்கேஜ் அனுமதி, மற்றும் 30 எம்பி ஆன் போர்டு வை-ஃபை ஆகியவை அடங்கும். கூடுதலாக, இந்தச் சலுகையின் போது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் க்ரிஸ்ஃபிளையர் உறுப்பினர்கள், தங்கள் ஸ்கூட் விமானப் பயணங்களில் மைல்களைப் பெறலாம். இது அவர்களின் பயணத்திற்கு கூடுதல் மதிப்பைக் கொடுக்கும்.

மேலும் படிக்க