September 10, 2025
தண்டோரா குழு
பிளிப்கார்ட் ஆதரவு பெற்ற முன்னணி யுபிஐ தளமான சூப்பர்.மணி, புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸை வைத்து ‘கேஷ்பேக் கேட்சர்’ என்னும் புதிய டிஜிட்டல் விளம்பரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் களத்தில் மிகவும் சுறுசுறுப்பான வீரராக அனைவருக்கும் நன்கு பரிச்சயமான ஜான்டி ரோட்ஸ், இந்த விளம்பரத்தில் புத்திசாலித்தனமான, சுறுசுறுப்பான, விழிப்புமிக்க ஒரு நபராக நடித்துள்ளார். உலகின் தலைசிறந்த பீல்டர்களில் ஒருவர் கிரிக்கெட் பந்துகளுக்குப் பதிலாக கேஷ்பேக்கைத் துரத்தத் தொடங்கும்போது என்ன நடக்கிறது என்பதை இந்த விளம்பரம் காட்டுகிறது.
இதில், சூப்பர்.மணி ஜான்டி ரோட்ஸை கிரிக்கெட் மைதானத்திலிருந்து அன்றாட வாழ்க்கைக்குக் கொண்டுவருகிறது, அவரது தனித்துவமிக்க சுறுசுறுப்பு கேஷ்பேக்கைப் பெற முயல்கிறது. இன்றைய நுகர்வோர் ஒவ்வொரு பரிவர்த்தனையிலிருந்தும் பரிசுகளை எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்த விளம்பரம் தெளிவாக எடுத்துகூறுகிறது.
சமீபத்திய ஆய்வின்படி, 95 சதவீத இந்திய டிஜிட்டல் நுகர்வோர் கேஷ்பேக் சலுகைகளை மிகவும் அதிகம் விரும்புவதாக தெரிய வந்துள்ளது. கிரிக்கெட் மைதானத்தில் ஒவ்வொரு பந்தையும் ஜான்டி டைவ் அடித்து பிடிப்பது போல, இன்றைய நுகர்வோர் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறார்கள், ஒவ்வொரு ஸ்வைப், டேப் அல்லது ஸ்கேன் மூலமும் சிறப்பு சலுகைகளை பெற விரும்புகிறார்கள். மளிகைப் பொருட்கள் வாங்குவதாக இருந்தாலும் சரி, விமான டிக்கெட் முன்பதிவு செய்வதாக இருந்தாலும் சரி, அவர்கள் உடனடி, உண்மையான மற்றும் நம்பகமான சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள்.
இது இனி ஒரு துரத்தல் அல்ல, ஒவ்வொரு செலவும் ஒரு வெற்றியாக மாறும், ஒவ்வொரு கணமும் ஏதாவது ஒன்றைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பாக மாறும் என்பதற்கு சூப்பர்.மணி உத்தரவாதம் அளிக்கிறது. ஜான்டி எப்படி ஒரு ரன் கூட தவறவிடாமல் செயல்படுகிறாரோ அதுபோல சூப்பர்.மணி யுபிஐ பயன்படுத்தும் பயனர்கள் ஒரு ரூபாயைக் கூட சிறப்பு சலுகையை பெறலாம். மேலும் இந்த விளம்பரம், களத்தில் ஜான்டியின் இடைவிடாத முயற்சியை நவீன நுகர்வோரின் தொடர்ச்சியான கேஷ்பேக் வேட்டையுடன் புத்திசாலித்தனமாக இணைக்கிறது, இந்தத் தேடல் இறுதியாக முன்னணி வங்கிகளுடன் இணைந்து சூப்பர்.மணி யுபிஐ-இணைக்கப்பட்ட இணை-பிராண்டட் கிரெடிட் கார்டுகளுடன் முடிகிறது, இது ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் 3 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்குகிறது.
பெரிய அல்லது சிறிய பரிவர்த்தனைகள் என அனைத்திலும் பயனர்கள் சலுகைகளை பெறுவதற்கான உத்தரவாதத்தை அளிக்கிறது. முன்னணி வங்கிகளுடன் இணைந்து செயல்படும் சூப்பர்.மணியின் கிரெடிட் கார்டுகள் அதன் உறுதிமொழி பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த விளம்பரத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த விளம்பர தற்போது டிஜிட்டல் மற்றும் சமூக தளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது.
இது குறித்து சூப்பர்.மணி இணை நிறுவனர் பிரேமான்ஷு சிங் கூறுகையில்,
எங்களைப் பொறுத்தவரை, பரிசுகள் எளிமையானதாகவும், சீரானதாகவும், உண்மையிலேயே மதிப்புமிக்கதாகவும் இருக்க வேண்டும், சிக்கலானதாகவோ அல்லது நிபந்தனைக்குட்பட்டதாகவோ இருக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். அந்த வகையில் பயனர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் சிறந்த சலுகைகளை வழங்கி அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே எங்களின் முக்கிய நோக்கமாகக் கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்த விளம்பரத்தில் ஜான்டி ரோட்ஸ் அதே உணர்வை உயிர்ப்பிக்கிறார், எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறார், எப்போதும் விழிப்புடன் இருக்கிறார், உண்மையிலேயே பலனளிப்பதை எப்போதும் தேடுகிறார். பல வழிகளில், ஜான்டி தான் மட்டும் சுறுசுறுப்புடன் இருக்காமல், ஒவ்வொரு இந்திய நுகர்வோரையும் சுறுசுறுப்புடன் இருக்க வைக்கிறார். இதன் மூலம், நாங்கள் ஒரு சுவாரஸ்யமான கதையை மட்டும் சொல்லவில்லை, நுகர்வோர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் உறுதியான பரிசுகளை வழங்கும் எங்கள் உறுதிப்பாட்டை கூறியுள்ளோம் என்று தெரிவித்தார்.