• Download mobile app
24 Dec 2025, WednesdayEdition - 3605
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி புற்றுநோய் சிகிச்சை மையத்தின் 5வது ஆண்டு விழா – 4 சிறந்த மருத்துவர்களுக்கு விருது !

August 25, 2025 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி புற்றுநோய் சிகிச்சை மையத்தின் 5 ஆண்டு விழா மருத்துவமனை கலையரங்கத்தில் இன்று காலை கொண்டாடப்பட்டது.மெடிக்கல் சூப்பிரண்ட் டாக்டர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார்.

பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.இயக்குனர் டாக்டர் பாலாஜி, பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் தலைவர் ஜி.ஆர்.கார்த்திகேயன் கலந்து
கொண்டார்.

விழாவில் தேசிய மற்றும் உலகளாவிய அளவில் புற்றுநோய் சிகிச்சையினை வடிவமைத்த தொலைநோக்கு கொண்ட மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது டாடா மருத்துவ மையம் முன்னாள் இயக்குநர் பத்மஸ்ரீ டாக்டர்.மாமன் சாண்டி,
யெனபோயா பல்கலைக்கழகம்
துணைவேந்தர் பேராசிரியர் எம்.விஜயகுமார்,டாடா நினைவு மருத்துவமனை இயக்குநர் டாக்டர். சி.எஸ். பிரமேஷ்,கச்சார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இயக்குநர் பத்மஸ்ரீ டாக்டர்.ரவி கண்ணன் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் சுப்பாராவ் நன்றியுரை கூறினார்.நிகழ்ச்சியில் மருத்துவர்கள்,பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க