August 16, 2025
தண்டோரா குழு
கோவை செளரிபாளையம் பகுதி உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் இந்திய தேசத்தின் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் உடையாம்பாளையம் பாரத மாதா திடலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் M.கெளரி சங்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் துப்புரவு பணியாளர் பிரதிமா, வழக்கறிஞர் சுபாசினி ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்கள்.காந்திநகர் நாகராஜ் தேசத்தலைவர்கள் உடன் கூடிய பாரதமாதாவின் திருவுருப்படத்திற்கும், மதநல்லிணக்கத்தின் அடையாளமாக மும்மதங்களின் புனித நூலான பகவத்கீதை- குர்ஆன் பைபிள் நூல்களுக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்து வணங்கினார்.
அன்னை ஆட்டோ கேரேஜ் நிறுவனரும், தொழிலதிபரும்,சமூக சேவகருமான சண்முகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.இலட்சியத்துளி மக்கள் அமைப்பின் நிறுவனர் தினேஷ்குமார் அவர்கள் உலக சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக சமாதான புறாக்களை பறக்க விட்டு சிறப்புரையாற்றினார்.மாஸ்டர் சிலம்பம் நிறுவன ஆசிரியர் ஆனந்தன் அவர்கள் கோவை மாநகர காவல் துறை, உயிர் அமைப்புடன் இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கோவை மாவட்ட நூலக ஆணைக்குழு -பள்ளி கல்வித்துறை,செளரிபாளையம் மகாகவி பாரதி அம்மன் அடிமை அரசு பொது நூலக வாசகர் வட்டத்துடன் இணைந்து வாசிப்பை நேசிப்போம் புத்தக விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து செளரிபாளையம் -உடையாம்பாளையம் சாலைகள் வழியாக பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுடன் உடன் சிலம்ப மாணவர்களின் சிலம்ப விளையாட்டுகளுடன் ஊர்வலமாக வலம் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பித்தார்கள்.
சமூக சேவகர் முரளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்,எழுது பொருள்கள்,இனிப்புகள், பிஸ்கட் பாக்கெட்களை வழங்கி சிறப்பித்தார்கள்.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதான உணவை குமாரபாளையம் ஸ்ரீ குகன் கேட்டரிங் நிறுவனர் சங்கர் அவர்கள் பெருந்துறை பகுதியைச் சார்ந்த கெளரி பிரகாஷ் ரிகாஷினி அவர்களுடன் இணைந்து வழங்கி சிறப்பித்தார்கள்.
விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் சிறந்த இந்திய குடிமகன் எனும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.விழாவில் தபால் ஊழியர் ஸ்ரீதர், சிவக்குமார்,ஸ்ரீ தர்ஷினி ஏஜென்சிஸ் நிறுவனர் கார்த்திக்,சஞ்சய் மற்றும் இலட்சிய துளி மக்கள் அமைப்பின் நிர்வாகிகள் ரஞ்சித், ஆன்டனி, ரெக்ஸ், லியாண்டர்,அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.