• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையை சேர்ந்த எழுத்தாளர் உருவாக்கிய இந்தியாவின் முதல் ‘மிரர் எடிஷன்’ புத்தகம்

August 16, 2025 தண்டோரா குழு

கோவையைச் சேர்ந்த எழுத்தாளர்,தேசிய பங்குச்சந்தை சான்றிதழ் பெற்ற பங்குச்சந்தை நிபுணர் மற்றும் பொருளாதார பத்திரிகையாளரான நாகராஜ் பாலசுப்ரமணியம் தனது நான்காவது புத்தகமான ‘தி பிஹேவியரல் இன்வெஸ்டர்’ (The Behavioral Investor) மற்றும் அதன் ‘மிரர் எடிஷன்’ பிரதியை வெளியிட்டார்.

‘மிரர் எடிஷன்’ என்பது ஒரு புதுமையான வடிவமைப்பாகும்.இதில் புத்தகத்தின் அட்டை முதல் உள்ளடக்கம் வரை அனைத்தும் தலைகீழாக அச்சிடப்பட்டிருக்கும். முகாம் காட்டும் கண்ணாடியின் உதவியுடன் மட்டுமே இதை படிக்க முடியும். மிரர் எடிஷன் முறையில் இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் புத்தகம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியைச் சேர்ந்த அத்யான் புக்ஸ் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தின் இயல்பான பதிப்பை, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வேல்ராஜ் வெளியிட்டார்.குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின், MBA (IEV) துறைத் தலைவர் பேராசிரியர் அமன் குமார் துபே முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

இந்த புத்தகத்தின் மிரர் எடிஷனை பிரபல யூடியூபரும் பேச்சாளருமான சேரன் அகாடமியின் நிறுவனர் ஹுசைன் அகமது வெளியிட்டார். பேச்சாளர் குருஞானாம்பிகா முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

புத்தகத்தின் ஆசிரியர் நாகராஜ் பாலசுப்ரமணியம், 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஒரு மியுச்சுவல் பண்டு விநியோகஸ்தர் மற்றும் பொருளாதார பத்திரிகையாளர்.

அவரின் ‘தி பிஹேவியரல் இன்வெஸ்டர்: வை ஸ்மார்ட் பீப்புள் மேக் புவர் ஃபினான்சியல் சாய்ஸஸ்’ (‘The Behavioral Investor: Why Smart People Make Poor Financial Choices’) என்ற தலைப்பிலான இந்தப் புத்தகம், நடத்தை சார்ந்த நிதி (behavioral finance) குறித்து ஆராய்கிறது.

உணர்ச்சிபூர்வமான சார்புகளும் அறிவாற்றல் சிக்கல்களும் மிக புத்திசாலித்தனமான முதலீட்டாளர்களைக் கூட எவ்வாறு விலையுயர்ந்த தவறுகளை செய்யத் தூண்டுகின்றன என்பதை விவரிக்கிறது.
அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நிஜ உலக ஆய்வு வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம், செல்வத்தைக் கட்டமைக்க சரியான உத்திகளைப் பயன்படுத்தவும் தேவையான கருவிகளை வாசகர்களுக்கு வழங்குகிறது.

சிக்கலான நிதி சார்ந்த கருத்துக்களை மக்களுக்கு எளிமையாக புரியவைப்பதில் நாகராஜ் பாலசுப்ரமணியம் திறமையானவர். ஐ.ஐ.எம் லக்னோவின் முன்னாள் மாணவரான அவர், பங்குச்சந்தை நிபுணத்துவம் மற்றும் இது தொடர்பான பல கட்ட ஆலோசனை வழங்குவதற்கான சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

மிரர் எடிஷன் குறித்து நாகராஜ் பாலசுப்ரமணியம் பேசுகையில்,

மிரர் எடிஷன் புத்தகங்கள் ஒரு விஷயத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதையும், நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதையும் மாற்றும் என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு புதிய கண்ணோட்டத்திற்கு அழைத்து செல்லும், என்றார்.

“மிரர் எடிஷன் என்பது வெறும் ஒரு புதிய விஷயம் மட்டுமல்ல; நமதுநடத்தை சார்ந்த நிதி, நமது மன குறுக்குவழிகளைக் கேள்வி கேட்க நம்மைத் தூண்டுவதுபோல, தகவல்களை நாம் எப்படி ‘பார்க்கிறோம்’ என்பதை மறுமதிப்பீடு செய்ய உதவும் ஒரு ஆக்கபூர்வமான நினைவூட்டலாகும்” என்று அவர் கூறினார்.

சந்தை நுண்ணறிவு, உளவியல் மற்றும் நடைமுறை உத்திகளின் கலவையுடன், ‘தி பிஹேவியரல் இன்வெஸ்டர்’ ஒரு நிதி வழிகாட்டியாகவும், ஆக்கபூர்வமான பதிப்புத்துறையில் ஒரு மைல்கல்லாகவும் விளங்குகிறது.இந்த மிரர் எடிஷன் புத்தகத்தின் தனித்துவத்தை பெருமைப்படுத்தும் விதமாக நாகராஜ் பாலசுப்ரமணியத்தின் ‘தி பிஹேவியரல் இன்வெஸ்டர்’ புத்தகம், இந்தியாவின் முதல் மிரர் எடிஷன் புத்தகமாக இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த புத்தகம் ஜூலை 2025-ல் லண்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்வை கோயம்புத்தூரில் உள்ள ‘ஹேண்ட் கிராஃப்ட் ஈவென்ட்ஸ் ஸ்டுடியோஸ்’ என்ற நிகழ்வு மேலாண்மை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் ‘வளம் (NGO)’ அமைப்பின் நிறுவனர் வி.எஸ்.சந்திரகுமார், ‘ஆர்.வி. கார்மென்ட்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.வி. சிவகுமார் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ப்ளாசம் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க