• Download mobile app
17 Jul 2025, ThursdayEdition - 3445
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்

January 30, 2017 findmytemple.com

சுவாமி : நெல்லையப்பர்.

அம்பாள் : காந்திமதி அம்மன்.

தீர்த்தம் : பொற்றாமரை தீர்த்தம் (சுவர்ணபுஷ்கரணி), கரி உருமாறி தீர்த்தம் (சந்திரபுஷ்கரணி), வெளித் தெப்பக்குளம், சிந்துபூந்துறை உட்பட 32 தீர்த்தங்கள்.

தலவிருட்சம் : மூங்கில் மரம்.

தலச்சிறப்பு :

திருநெல்வேலி தலம் விசேஷ சிறப்புடையது. அம்மை தான் படைத்த உலகத்தைக் காத்தல் பொருட்டு இறைவனை வேண்டித் தவம் இயற்றி அவன் அருளை உலகம் பெறும் படிச் செய்தது வரலாறு. உமாதேவி கயிலை மலையினின்றும் நீங்கி, இறைவனிடம் இருநாழி நெல் பெற்று, வேணுவனம் அடைந்து, முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்தது. கம்பை நதியின் அருகிலேயே இறைவனை நினைத்து தவமிருந்து, நெல்லை நாதனது திருவருட்கோலக் காட்சி எய்தி மணந்தருளியது. இறைவன் சிவனும் சக்தியுமாய் இயங்கி உயிர்களுக்குப் போக வாழ்வினை அளித்தருளி அம்மை அப்பனாய் எல்லா உயிர்களையும் காத்து அருள்வது, உயிரிகளுக்குத் தவம் இயற்றும் முறையை அறிவுறுத்தற் பொருட்டு அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டி திருக்கல்யாண விழா நடத்தியது ஆகிய திருவிளையாடல்கள் நடைபெற்ற மேன்மை உடையது இத்தலம்.

ஆயிரங்கால் மண்டபம் :

1000 தூண்கள் உடையது. ஜப்பசி திருக்கல்யாண திருவிழா நடைபெறும் மண்டபம். இம்மணடபம் 520 அடி நீளம் 63 அடி அகலம் உடையது. பங்குனி உத்திரத்தன்று செங்கோல் கொடுத்தல் நிகழ்ச்சி இம்மண்டபத்தில் நடைபெறும். இம்மண்டபத்தின் உச்சிஷ்ட கணபதி நம்மை ஈர்க்கும் தோற்றம் உடையது. ஐப்பசி திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபம். கீழ்பகுதியில் ஆமை ஒன்றினால் தாங்கப்படுவது போன்ற வடிவமைப்பில் கட்டபட்டுள்ளது. மகாவிஷ்ணுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூஜிப்பதாய் ஐதீகம்(கச்சபாலயம்) புனர்பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்.

தல வரலாறு :

சிவபெருமானின் நிவேதனத்திற்காக வேதசர்மா எனும் அந்தணச்சான்றோர் பிச்சை எடுத்து வந்து உலர்த்தி இருந்த நெல்லை, எதிர்பாராது பெய்தமழை அடித்து சென்று விடுமோ என அஞ்சி இறைவன் நெல்லை, நீர் அடித்துக் கொண்டு போகாமல் வேலியாக நின்று காத்தமையால், நெல்வேலி நாதர் எனப்பெயர் பெற்றார். இத்திருவிளையாடல் நடைபெற்ற இத்தலத்திற்கும் திருநெல்வேலி என்னும் பெயர் வந்தது.

நடைதிறப்பு :

காலை 6.00 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் :

இத்திருக்கோயிலில் ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

சித்திரை – வசந்த்மஹோற்சவம் (பதினாறு தினங்கள்),

வைகாசி – விசாகத்திருநாள் (ஆனி பெருந்தேர் திருவிழா),

ஆனி – பிரம்மோற்சவம் (ஆனி பெருந்தேர் திருவிழா),

ஆடி – பூரத்திருநாள் (பத்து தினங்கள்),

ஆவணி – மூலத்திருநாள் (பதினொரு தினங்கள்),

புரட்டாசி – நவராத்திரிவிழா (பதினைந்து தினங்கள் லட்சார்ச்சனையுடன்),

ஐப்பசி – திருக்கல்யாணம்உற்சவம் (15 தினங்கள்),

கார்த்திகை – கார்த்திகைதீபம், சோமவாரத் திருவிழா (ஒரு நாள்),

மார்கழி – திருவாதிரைவிழா (பத்து தினங்கள்),

தை – பூசத்திருவிழா (பத்து தினங்கள்),

மாசி – மகாசிவராத்திரி (ஒரு நாள்),

பங்குனி – உத்திரத்திருநாள் (பத்து தினங்கள்).

அருகிலுள்ள நகரம் : திருநெல்வேலி.

கோயில் முகவரி : அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி – 627 006.

மேலும் படிக்க