• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்

June 9, 2025 தண்டோரா குழு

நெகமம் காணியாலம்பாளையத்தில் பாலகிருஷ்ணன் என்பவரின் சொந்த நிலத்தில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டுவரப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவியுள்ளது.

இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. நிலத்தில் உள்ள பாறைக்குழி நிரப்புவதற்கு பழைய மோட்டார் வாகன சீட் கவர்கள் , ஸ்பாஞ்சு போன்ற கழிவுகளுடன் வணிக கழிவுகள் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளன.கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக தண்ணீரில் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் ஏற்பட்டது.

நெகமம் காவல் நிலைய காவலர்கள் மற்றும் தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வருவாய் துறை ஆய்வில், அங்கு எந்தவிதமான மருத்துவக் கழிவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தால் நில உரிமையாளருக்கு உடனடியாக அந்த கழிவுகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என காவல்துறையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க