• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமூகத்தில் பெண்கள் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்க வேண்டும் -உதவி கமிஷனர் அஜய் தங்கம் பேச்சு

May 31, 2025 தண்டோரா குழு

கோவை சாரமேடு பகுதியில் அர் ரஹ்மான் அகாடமி பெண்களுக்கான கட்டணமில்லா கல்வியகம் தொடக்க விழா நடைபெற்றது.

இதில் தெற்கு சரக போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கம்,கல்வி பூங்காக்கள் மற்றும் விளையாட்டுக்குழு தலைவர் மாலதி 86 வது மாமன்ற உறுப்பினர் அகமது கபீர் உதவும் உள்ளங்கள் பொதுநல அறக்கட்டளையின் நிர்வாகிகள் பைசல் , சத்தார்,ஹக்கீம்,உமர்,சிராஜ்தீன் , ஜிபைர், மன்சூர்,ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பெண்களின் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை உருவாக்கிய காவல் உதவி ஆண்டிராய்டு செயலியின் பயன்பாடு மற்றும் போலீஸ் அக்கா திட்டம் தொடர்பான முக்கிய தகவல்களை அஜய் தங்கம் விளக்கி பேசினார்.

மேலும் பெண் கல்வியின் அவசியம் மற்றும் சமூகத்தில் பெண்கள் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்க வேண்டும் என்ற லட்சிய உணர்வை எடுத்துரைத்தார்.இதில் 10, 12-ம்வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க