• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!

May 23, 2025 தண்டோரா குழு

இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஊர் கேப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் தொழில்நுட்பம் அடிப்படையிலான மொபிலிட்டி தளமான ஊர் கேப்ஸ் -க்கு, 2025-26 நிதியாண்டில் 500 என்ற எண்ணிக்கையில் டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் மின்சார மூன்று சக்கர வாகனங்ககளை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வழங்க உள்ளது. இந்த செயல்பாட்டு உத்தி தமிழ்நாடு முழுவதிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான நகர்ப்புற போக்குவரத்தை முன்னெடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஊர் கேப்ஸ், ஒரு குறிப்பிட்ட நகரத்திற்குள்ளாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பயணிகளுக்கான போக்குவரத்து சேவையை வழங்க டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் மின்சார மூன்று சக்கர வாகனங்ககளை களமிறங்குகிறது.திருச்சியில் இருந்து உள்-நகர பயணிகளுக்கான போக்குவரத்து சேவை தொடங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 179 கிமீ தூரம் பயணிக்கும் ஆற்றல், டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸ்சோநெக்ட் மூலம் புளூடூத் இணைப்பு, விறுவிறுவென சார்ஜ் ஏற்றும் விரைவான சார்ஜிங் திறன்,விசாலமான இடவசதி, செளகரியமளிக்கும் வகையில் அமர்வதற்கும், பயணிப்பதுக்கும் ஏற்ற எர்கோனமிக் வடிவமைப்பு ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற டிவிஸ் கிங் இவி மேக்ஸ் வாகனங்கள் ஊர் கேப்ஸ்-ன் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப தனித்துவமிக்க வசதிகளுடன் தனிப்பயனாக்கப்பட்டுள்ளது. இதனால் ஊர் கேப்ஸ்-ன் புதிய மின்சார வாகனங்கள் ,பயணிகளுக்கான ஆன்-போர்டு குடிநீர் வசதிகள், மேம்பட்ட கேபின் வசதிக்காக வாகன கூரையில் வெப்பம் இறங்காமல் தடுக்கும் தெர்மல் இன்சூலேஷன் மற்றும் மொபைல் சார்ஜிங் போர்ட்கள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதனால், ஊர் கேப்ஸ் -ன் ஒவ்வொரு டிவிஸ் கிங் இவி மேக்ஸ் வாகன சவாரியும் பிரீமியம் தரத்திலான பயண அனுபவமாக மாற்றும்.

இந்த நிகழ்வில் பேசிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் கமர்ஷியல் மொபிலிட்டி பிரிவின் பிஸினெஸ் ஹெட் ரஜத் குப்தா,

“இந்தியாவில் பசுமைப் போக்குவரத்து இயக்கத்தை நோக்கிய புரட்சிகரமான மாற்றத்தை துரிதப்படுத்துவதில் ஊர் கேப்ஸ் உடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த தூய்மையான, செளகரியமான போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டு கைக்கோர்த்துள்ளோம்” என்றார்.

ஊர் கேப்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மரியா ஐசக் கூறுகையில்,

” ஊர் கேப்ஸ், வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையற்ற, சுற்றுச்சூழலுக்கு உகந்த, தூய்மையான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடனான எங்கள் கூட்டு செயல்பாடு, எங்களது வாகனங்கள் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் அதே வேளையில் பயணிகளின் அனுபவத்தை மேம்பட்ட அனுபவமாக தரம் உயர்த்தும்.

இந்த ஆண்டு எங்கள் வாகன எண்ணிக்கையை 500 மின்சார வாகனங்களாக விரிவுபடுத்தும் தொலைநோக்குப் பார்வையுடன், எங்களது நிறுவனம் பின்பற்றும் உயர் தரங்களுடன் பொருந்தக்கூடிய தயாரிப்பு மற்றும் பொறியியல் திறன்களைக் கொண்டிருக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடன் பயணத்தைத் தொடங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்றார்.

மேலும் படிக்க