May 21, 2025
தண்டோரா குழு
அன்னையர் தினம் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாய் தாய் – சேய் சிலை கோவை தடாகம் சாலை, லாலி ரோடு சந்திப்பு ரவுண்டாவில் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை ராவ் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் ஆர்.எஸ்.ராவ் மற்றும் நிர்வாக இயக்குனர், மருத்துவர் ஆஷா ராவ் ஆகியோர் கூறும்போது:-
கோவை மாநகரை தூய்மைப்படுத்தி அழகு சேர்க்கும் விதமாக கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தடாகம் ரோடு லாலி ரோடு சந்திப்பில் இந்த தாய் – சேய் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையானது ஆறரை அடி உயரம் கொண்டுள்ளது.இது உயர்ரக பைபர் ஆப்டிக்கினால் தயாரிக்கப்பட்டுள்ளது. உள்ளே அலுமினியம் மற்றும் இரும்பு பொருட்களால் இயற்கை சூழலை தாங்கும் விதத்தில் உருவாகியுள்ளது. இதன் மேல் தீட்டப்பட்டுள்ள வர்ணமானது கார்களுக்கு பயன்படுத்தும் உயர்ரக வர்ணம் ஆகும்.
கருத்தரித்தல் மருத்துவத்துறையில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக சாதனை புரிந்து வரும் கோவை ராவ் மருத்துவமனை இச்சிலையை தேர்ந்தெடுத்தமைக்கு காரணம் தாய்மையை போற்றும் விதமாக அமையப் பெற்றுள்ளது. தாய், சேய் சிலையினை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
இது ஒரு கலைப் படைப்பு மட்டுமல்ல, 70 ஆண்டுகள் பாரம்பரியமிக்க ராவ் மருத்துவமனையின் சிகிச்சை மேன்மைக்கான ஒரு அடையாளமும், அர்ப்பணிப்பும் ஆகும். ராவ் மருத்துவமனையில் குழந்தைகள் பிறப்பில், அன்பு, உறுதி, நம்பிக்கை தியாகம், அர்ப்பணிப்பு என சிகிச்சை முறையில் மேன்மையான மதிப்பீடுகளைக் கையாளுகிறோம். காலத்தால் அழியாத உலகளாவிய ஒரு பந்தம் இந்தத் தாய் – சேய் உன்னத சிலையின் உருவமாகும்.
இதனை அமைப்பதற்கு அனுமதி அளித்த கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகியோருக்கு எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த சிலையை பிளாக்சிப் மீடியா என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஆர். சதீஷ்குமார் மற்றும் ஆர்.மகா பிரபு ஆகியோர் இச்சிலையினை வடிவமைத்துள்ளனர்.
இன்று நடைபெற்ற சிலை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டனர்.
மேலும் விழாவில் இனை இயக்குனர் மருத்துவர் தாமோதர் ராவ், இயக்குனர் – நிர்வாகம்,தீபிகா ராவ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்த அற்புதச் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியின் போது, கலாச்சார முக்கியத்துவ நினைவூட்டமாக பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.