• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது

May 14, 2025 தண்டோரா குழு

கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 10ம்தேதி குழந்தைகளின் கல்வி நலனிற்க்காகவும்,குடும்ப ஐஸ்வர்யத்திற்க்காகவும் 1008 திருவிளக்கு பூஜையும்,கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.

அதன் தொடக்கமாக இன்று கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கோவை திருவிளக்கு திருவிழா “லோகோ” வெளியிடும் விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், அவிநாசி வாசிஸர் மடாலயம் ஸ்ரீ ல ஸ்ரீ காமாட்சி தாஸ் சுவாமிகள், தென்சேரி ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார் மற்றும் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை கேஜி மருத்துவமனை நிறுவனர் ஜி. பக்தவச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து விழா ஏற்பாட்டாளர்கள் கூறும்போது,

ஜூன் மாதம் பத்தாம் தேதி நடைபெற உள்ள இந்த திருவிளக்கு திருவிழாவில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு பட்டுப் புடவை மற்றும் வெள்ளி நாணயம் உட்பட 16 வகையான தாம்பூலப் பரிசுபொருட்கள் வழங்கப்பட உள்ளது என்றும், பூஜைக்கு தேவையான 27 வகையான பொருட்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இதற்கான கட்டணம் ஏதும் கிடையாது என்றும்,இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்கள் தங்களுடைய பெயர்களை முன் முன்பதிவு செய்து கொள்ளுமாறும்,இந்த விழாவில் 3000-க்கு மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்றும், கலந்து கொள்வோர்களுக்கு உணவு மற்றும் போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க