• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோய் சிறப்பு ஒரு நாள் முகாம்!

March 27, 2025 தண்டோரா குழு

முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் சார்பில் சர்க்கரை நோய் சிறப்பு முகாம் 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 12 மணி வரை கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கேஎம்சிஹெச் மருத்துவமனையில்
நடைபெறவுள்ளது.

முகாமின் சிறப்பு பரிசோதனைகள்
இந்த முகாமில் இதில் ரத்தத்தில் சர்க்கரை அளவு,3 மாத சராசரி சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரால் அளவு, சிறுநீர் பரிசோதனை, ஹீமோகுளோபின் பரிசோதனை, ரத்தத்தில் உப்பு, தைராய்டு ஆகிய பரிசோதனைகள் சலுகை கட்டணத்தில் ரூபாய் 1500க்கு செய்யப்படுகிறது.மேலும் இதர சிகிச்சைகள் நோயாளிகளுக்கு 25% சலுகை கட்டணத்தில் செய்யப்படுகிறது.

முகாமின் சிறப்பு அம்சங்கள் இந்த முகாமில் சிறப்பு அம்சங்களாக நீரிழிவு நோய் பராமரிப்பு வழிகாட்டுதல், கால் பராமரிப்பு, உணவு கண்காட்சி உணவு ஆலோசனை, சர்க்கரை நோய் மருத்துவர் ஆலோசனை ஆகியவையும் வழங்கப்படும்.

யார் யார் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம்.இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், எடை குறைதல், அதிக பசி, தாமதமாக குணமாகும் காயங்கள்/ புண்கள், மிகவும் சோர்வாக உணர்வது, கை அல்லது கால்களில் மரத்துப்போகும் உணர்வு / உணர்வின்மை அல்லது வலி, மங்கலான கண் பார்வை முதலான பிரச்சனைகள் உள்ள நோயாளிகள் மற்றும் ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதில் கலந்துகொண்டு பலன் பெறலாம்.

இந்த ஒரு நாள் முகாமினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். முகாமில் பங்குபெற முன்பதிவு அவசியம் :9894008800.

மேலும் படிக்க