• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் மரம் வளர்ப்போம் மன்னுயிர் காப்போம் திட்டம் ஆரம்பம்

January 26, 2017 தண்டோரா குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை மாவட்ட கிளை சார்பில் 500 மரக்கன்றுகள் நடும் திட்டம் வியாழனன்று தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை மாவட்டத்தின் சார்பில் மழை வேண்டி கடந்த ஜனவரி 15ம் தேதி15க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் சுமார் 15000 மக்கள் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக வியாழன்று கோவை தெற்கு மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக “மரம் வளர்ப்போம் மண்ணுயிர் காப்போம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியைக் கிளையின் தலைவர் அஷ்ரப் அபு சாலி தொடங்கி வைத்தார்.

இது குறித்து மாவட்ட துணைத் செயலாளர் நசீர் அஹமத் கூறியதாவது:

“நாடு முழுவதும் சாலைகளை விரிவுபடுத்தவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் சூற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அத்துடன் பருவமழை பொய்த்து, கடும் வறட்சியும், விவசாயிகளின் தற்கொலைகளும் டெல்டா மாவட்டங்களில் மட்டுமின்றி, தமிழகமெங்கும் பரவி வருகிறது. இதுவரை 140 விவாசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகம் வறட்சி மாநிலமாக அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமின்றி, புவி வெப்பமயமாதல் (Global Warming) பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட ஆசாத் நகர் கிளை சார்பில் 500 நடும் விழா வியாழனன்று தொடங்கப்பட்டது. வெறும் மரக்கன்றுகள் மட்டும் நடாமல் ஒரு மரக்கன்றுக்கு 800 ரூபாய் செலவில் பாதுகாப்புக் கூண்டுகள் அமைத்து, அதனைப் பராமரிக்க இருக்கிறோம்”

இவ்வாறு நசீர் அஹமத் கூறினார்.

மேலும் படிக்க