• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போலீஸ் வன்முறைக்கு விளக்கம் தேவை : கமல்ஹாசன்

January 24, 2017 tamilsamayam.com

”தமிழகத்தில் நேற்று நடந்த வன்முறைக்கு போலீசார் உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும். என்னைப் போன்று அவர்களும் நடிகர்கள்தான். அவர்கள் சீருடை அணிந்து நடிக்கிறார்கள்” என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன் கூறுகையில், ”கடந்த 20 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு வேண்டி தமிழர்கள் போராடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். மசோதாவை அமல்படுத்துங்கள் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழக கலாச்சாரத்தை ஊடுருவும் விதமாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. வீடியோவில் இருந்த போலீசார் உண்மையானவர்கள் இல்லையா? இந்த வீடியோக்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டியது போலீசாரின் கடமை. அளிப்பார்கள் என்று நம்புவோம். எந்த சட்டமும், தவறானதாக இருக்க முடியாது.

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் சரியானதே. வன்முறைக்கும், மாணவர்களுக்கும் சம்மந்தம் இல்லை. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., இருந்து இருந்தால் அவரும் மாணவர்களுடன் அமர்ந்து இருப்பார். மாணவர்களின் போராட்டத்துக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்.

மாணவர்களின் போராட்டம் தலைமை இல்லாத போராட்டமாக இருக்கலாம், ஆனால், ஒற்றுமையுடன் நடந்தது. இப்போதும் நான் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்காது. ஆதலால்தான், ஜல்லிக்கட்டுக்கான தடையை எதிர்த்து குரல் கொடுத்தேன்.

மிருகவதை தடுப்பு சட்டத்தில் இரட்டை நிலையை சிலர் எடுத்து விட்டனர். பல்வேறு கோப தாபங்களின் வெளிப்பாடே இளைஞர்களின் போராட்டம். இவர்களின் போராட்டம் என்னை மிகவும் கவர்ந்தது. இன்னும் மெரினாவில் போராடும் மாணவர்களை கலைக்க வேண்டாம். அவர்களுக்கு தெரியும்.போராடுபவர்கள் நாட்டுக்கு எதிரி அல்ல.

அலங்காநல்லூரில் விருமாண்டி படம் எடுக்க தடை விதித்தனர். அதுபோன்ற செட் சென்னையில் அனைத்து எடுத்தோம். ஜல்லிக்கட்டை தடுக்கக் கூடாது. முறைபடுத்த வேண்டும். எந்தப் பிரச்சனையையும் இழுக்கக் கூடாது. காவிரிக்கு எதிராக போராடியபோது நடிகர்களாகிய நாங்களும் போராடினோம்.” என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க