• Download mobile app
02 Jan 2026, FridayEdition - 3614
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜல்லிக்கட்டு போராட்டக் களத்தில் இளைய தளபதி விஜய்

January 21, 2017 tamilsamayam.com

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில், மக்களோடு மக்களாக நடிகர் இளைய தளபதி விஜய் கலந்து கொண்டார்.

பீட்டாவை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு திரைப் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். அதேசமயம், இளைஞர்கள் நடத்தும் இந்த போராட்டத்தில் அரசியல், சினிமா சாயம் இருக்கக் கூடாது என்பது இளைஞர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில், சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில், மக்களோடு மக்களாக நடிகர் இளைய தளபதி விஜய் கலந்து கொண்டார். தனது முகத்தை மூடிக் கொண்டு போராட்டக் களத்தில் மக்களோடு மக்களாக ஜல்லிக்கட்டுக்கு நடிகர் விஜய் ஆதரவு தெரிவித்தார்.

மேலும் படிக்க