• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் “ஐயாம் ஸ்பெஷல்” காலண்டர் வெளியீடு

October 7, 2023 தண்டோரா குழு

ஸ்வர்கா அறக்கட்டளை,தனது 9வது ஆண்டு விழாவை முன்னிட்டு,2024 ஆண்டுக்கான “ஐயாம் ஸ்பெஷல் காலண்டர்” வெளியிடுகிறது.

நாட்டுக்கு சேவைபுரியும்போது ஏற்பட்ட சம்பவங்களில் உடல் உறுப்புகளை இழந்து வாடும் மாற்றுத் திறனாளி ராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் இந்தக் காலண்டர் வெளியிடப்படுகிறது.

இந்த விழா கோவை தி ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை ஆட்சியர் ஸ்ரீகிராந்தி குமார் பதி, காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மாநகராட்சி ஆணையர் எம். பிரதாப், விமானப்படை கட்டளை அதிகாரி கேப்டன் அமித் கவுர், ராணுவம் தலைமையகம் நிர்வாக கமாண்டன்ட் லெப்டினன்ட் கர்னல் பிஜு, தகவல் தொடர்புத் தலைவர் ஐஎன்எஸ் அக்ராணி கேப்டன் பி.கே.பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று காலண்டரை வெளியிட்டனர்.

2025 காலண்டரில் இடம்பெற்றுள்ள மாடல்களின் விவரங்கள்,

கேப்டன் P. வேணுகோபால், சேந்தமங்கலம், கேரளா – தலைமைத்துவ மேம்பாடு, பயிற்சி மற்றும் NLPக்கான L&D திட்டங்கள் சௌர்ய சக்ரா விருது பெற்றவர்.

எல்என்கே ஏ. சியாமல் ராஜு, பொத்தேகுண்டா, நெல்லூர் (ஆந்தரம்) – விளையாட்டு வீரர் – வட்டு எறிதல், ஈட்டி, நீச்சல்.

LAC மிருதுல் கோஷ், குராஹ், முர்ஷிதாபாத்(மேற்கு வங்கம்) – மவுத் பெயிண்டர்.

Swr பிரேம் குமார் அலே, சுலியாலி, காங்க்ரா (ஹிமாச்சல் பிரதேசம்) – பூப்பந்து வீரர்.

Rfn மின் பகதூர் தாபா, பிரேந்திர நகர், சுர்கெத் (நேபாளம்) – விளையாட்டு வீரர் – நீச்சல், கூடைப்பந்து.

பிஎன்ஆர் பீம் குமார் கார்க்கி, பங்லங், சேனாபதி (மணிப்பூர்) – மவுத் பெயிண்டர் – கலா ரத்னா விருது பெற்றவர்.

மேஜர் தேவேந்திர பால் சிங், ஜகதாரி, இந்தியா – பாரா ஸ்கைடிவர் | மாரத்தான் வீரர் – 2018 – ரோல் மாடல் பிரிவின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருது.

PTR அமோல் போரிவாலே , பாஸ்மத், ஹிங்கோலி (மாஹ்) – வில்லாளி.

NAIK சுரேஷ் குமார் கார்க்கி, ஷிப்கஞ்ச், ஜாப்பா (நேபாளம்) – கூடைப்பந்து விளையாட்டு வீரா்.

செப் தபஸ் குமார் ராய், சுபூர், பாங்குரா (மேற்கு வங்கம்) – நீச்சல் வீரர்.

Rfn நிர் பகதூர் குருங், ஹேப்பி வேலி, ஷில்லாங் – விளையாட்டு நபர் – தடகள – 2022 – பாராலிம்பிக்களுக்கான தயான் சந்த் கேல் ரத்னா வாழ்நாள் விருது.

செப் அனில் குமார் கச்சி, ஜபல்பூர் (மத்திய பிரதேசம்) – கூடைப்பந்து விளையாட்டு வீரா்.

மேலும் படிக்க