• Download mobile app
14 Jul 2026, TuesdayEdition - 3807
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்” – ஓபிஎஸ்

January 20, 2017 தண்டோரா குழு

அவசரச் சட்டத்திற்கான சட்ட வரைவு தயாராக உள்ளது. ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் புது தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

“தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வலியுறுத்தினேன். அப்போது அவர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என உறுதியளித்தார்.

இதன் அடிப்படையில், மிருகவதைத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழக அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு அவசரச் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினேன்.

அதில் மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் திருத்தம் கொண்டு வந்து, அவசரச் சட்டத்தைத் தமிழக அரசே பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது. அவசரச் சட்டத்திற்கான சட்ட வரைவு தயாராக உள்ளது.
அது தமிழக அரசு அதிகாரிகள் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன்.

அவர்கள் அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து, ஒப்புதல் கிடைத்ததும் ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், பொதுமக்கள், இதர பிரிவினர் போராட்டத்தைக் கைவிட்டு, பணிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மேலும் படிக்க