• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் ‘பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது’ வென்ற பிரியங்கா சோப்ரா

January 19, 2017 tamilsamayam.com

அமெரிக்க தொலைக்காட்சி தொடரான ‘குவாண்டிகோ’ தொடரில் நடித்து வரும் பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவுக்கு ‘பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மைக்ரோசாப்ட் திரையரங்கில் நடைபெற்ற 43வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ‘விருப்பமான நாடக டிவி நடிகை’ எனும் பிரிவில் தனது இரண்டாவது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதினை பிரியங்கா சோப்ரா வென்றுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா கூறுகையில், ‘இங்குள்ள அனைத்து பெண்களும் என்னை பரிந்துரைத்துள்ளனர். அவர்கள் இல்லை என்றால் இது சாத்தியமில்லை. அவர்களால் தான் நான் இன்று நடிகையாக இருக்கிறேன், இதே பிரிவில் விருது வெல்வதை பெருமையாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார். சாலி லா பாயிண்டே வடிவமைத்த பீச் நிற ஆடையில் கண் கவரும் விதமாக பிரியங்கா சோப்ரா காட்சியளித்தார்.

ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு, குவாண்டிகோ தொடரில் நடித்த பிரியங்கா சோப்ராவுக்கு விருப்பமான நடிகை எனும் பிரிவில் ‘பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது’ வழங்கப்பட்டது.

குவாண்டிகோ தொடரின் பிரதான கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற பிரியங்கா சோப்ரா தற்போது ‘பே வாட்ச்’ எனும் ஆங்கிலத் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். குவாண்டிகோ தொடரின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பில் காயமடைந்த பிரியங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

மேலும் படிக்க