• Download mobile app
25 Aug 2026, TuesdayEdition - 3849
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோசமான வானிலை காரணமாக 1600 க்கும் மேற்பட்டோர் மரணம்

January 16, 2017 தண்டோரா குழு

இந்தியாவில் மோசமான வானிலை காரணமாக 2௦16 ம் ஆண்டு 1600க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அந்த மையம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை கூறப்பட்டுள்ளதாவது:

2௦16 ம் ஆண்டு கடுமையான வானிலை நிலவியது. இதில் 1600-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர். கடும் வெயிலுக்கு 700 பேர் உயிரிழந்தனர். இது மோசமான வானிலையில் உயிரிழந்தோரில் 40 சதவீதம் ஆகும்.

தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் 400 பேர் இறந்துவிட்டனர். மற்றவர்கள் வெள்ளம் மற்றும் மின்னல் காரணமாக பலியாயினர்.

உலகம் முழுவதும் முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருந்தது. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பெலாடி என்ற இடத்தில் அதிகபட்சமாக 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு முன்னர் இந்தியாவில் இந்த அளவுக்கு வெப்பம் இல்லை.

கடும் வானிலையால் மரணம் அடைந்தவர்களில் 35 சதவீதம் பேர் பிகார், குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த 3 மாநிலங்களில் மட்டும் 552 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

கடும் குளிரின் தாக்கத்தால் நாடு முழுவதும் 53 பேர் இறந்துவிட்டனர். இடி, மின்னல் தாக்கி பிகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 415 பேர் இறந்துவிட்டனர். இடிமின்னல் தாக்கத்தால் ஒடிசாவில் மட்டும் 132 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் பருவமழை இரண்டு முறை பொய்த்தது. ஆனால், கடந்த முறை பருவமழை இயல்பாக இருந்தது. எனினும், பல இடங்களில் கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தால் 475 பேர் பலியாகிவிட்டனர். தமிழகத்தில் வார்தா புயலால் 18 பேர் இறந்துவிட்டனர்.இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க