• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பிரஸ் டைரி2017வெளியீடு

January 13, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்ட பத்திரிகை அமைப்புகள் சார்பில்பொதுமக்கள் பயன்பெறும் வகையில்“கோவை பிரஸ் டைரி 2017” வெள்ளியன்று வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் தை திருநாளை முன்னிட்டு கோவை பத்திரிகை அமைப்புகள் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோவை மாவட்ட முக்கிய அரசு அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், காவல் அதிகாரிகள், ரயில் மற்றும் விமானங்கள் குறித்த தகவல்கள், முக்கிய கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் எண்கள் அடங்கிய டைரி வெளியிடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த 2017ம் ஆண்டிற்காக அச்சிடப்பட்ட கோவை பிரஸ் டைரியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட ஆணையாளர் அமல்ராஜ், கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆகியோர் வெள்ளியன்று வெளியிட்டனர்.

மேலும், கைக்கு அடக்கமாகவும் எளிதாக சட்டைப் பையில் வைத்து எடுத்து செல்லக் கூடிய வகையில் இந்த டைரி இருப்பதால் இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தை சார்ந்த பல்வேறு பத்திரிக்கை அமைப்புநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க