• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போன்றது

August 4, 2022 தண்டோரா குழு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல் இருப்பதாக ஓபிஎஸ் ஆணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் விமர்சித்துள்ளார்.

அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோவை செல்வராஜ் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க அவரது ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அவிநாசி சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதா ஆகியோரது திருவுருவ சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக என்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல இருப்பதாகவும் விமர்சித்தார். மேலும் அவர்கள் நீதிமன்றங்களுக்கு சென்றாலும் தேர்தல் ஆணையம் தங்களை அங்கீகரித்து இருப்பதாகவும் தற்போது வரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது தலைமையிலேயே செயல்பட்டு வருவதாகவும் கூறியதுடன் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த போது ஓபிஎஸ் விமான நிலையத்திற்கு சென்று வழியனுப்பி வைத்ததாகவும் ஆனால் டெல்லி சென்ற ஒருவரை சந்திக்க பிரதமர் அனுமதி அளிக்காததால் திரும்ப வந்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார்.

கோவை மாவட்டத்தில் விரைவில் அனைத்து கிளைக் கழக நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் எனவும் தற்போதுள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகம் யாருக்கும் சொந்தம் இல்லை என்றும் தற்போதைக்கு புதிய அலுவலகம் அமைத்து தாங்கள் செயல்பட இருப்பதாகவும் கூறிய அவர்,தொண்டர்களின் ஆதரவு ஓபிஎஸ் தரப்பிற்கு இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர்கள் 30 பேரை வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதேபோல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டாத கருத்துகளை கூறி வருவதாகவும் இப்படியே அவர் பேசி வந்தால் அவரது முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவரும் எனவும் கோவை செல்வராஜ் தெரிவித்தார்.

மேலும் படிக்க