• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநகர் பகுதியில் அனுமதியற்ற மற்றும் விதிமீறல் கட்டுமானங்களை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

June 29, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி வார்டு பணிகளை மேற்கொள்ளும் உதவி அல்லது இளம் பொறியாளர்கள் கட்டிட அனுமதி, மனைப்பிரிவு, மனை வரன்முறைப்படுத்துதல் ஆகியவற்றின் அனுமதி வழங்கும் பொருட்டு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், மனுதாரர்களின் விண்ணப்பங்களில் வரைபடங்கள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்த பின்னர் கட்டண தொகை செலுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும். கட்டிட அனுமதி வழங்கப்பட்ட பின்னர் கட்டுமானங்கள் ஒவ்வொரு நிலையிலும் வரைபட ஒப்புதலின்படி கட்டப்படுகிறதா என்பதை கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மாநகர் பகுதியில் அனுமதியற்ற மற்றும் விதிமீறல் கட்டுமானங்களை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்தந்த வார்டுகளில் மியாவாக்கி முறையில் அடர்வனம், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட் பகுதியை ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், அதனை அகற்ற வேண்டும். அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்றுவதுடன், நகரமைப்பு சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் அனைத்து வித மனுக்களுக்கு பதிலுரை வழங்க வேண்டும்.

உதவி செயற்பொறியாளர்கள் (திட்டம்) கோப்புகளை பரிசீலித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிப்பதுடன், அனுமதியற்ற மற்றும் விதிமீறல் கட்டுமானங்களை கண்டறிந்து நோட்டீஸ் வழங்கி அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதவி செயற்பொறியாளர்கள் தயார் செய்து அனுப்பும் ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் பணியினை செயற்பொறியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். கட்டிட அனுமதி வழங்கும் கோப்புகளில் 4 ஆயிரம் சதுரடி வரை உள்ள குடியிருப்பு தொடர்பான கோப்பின் இறுதி ஒப்புதலுக்கு துணை ஆணையாளருக்கும், 4 ஆயிரம் சதுர அடிக்கு மேல் என்றால் ஆணையாளருக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க