• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சி, 4 நகராட்சி, 15 பேரூராட்சி, 920 கிராமங்களுக்கு இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

June 22, 2022 தண்டோரா குழு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்படும் பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வீரபாண்டி பிரிவு அருகே 1500 மி.மீ. விட்டமுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொணரும் குழாயில் அவசர பராமரிப்பு பணிகள் இன்று (22ம் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் கோவை மாநகராட்சி பகுதிகள், பல்லடம், கருமத்தம்பட்டி, மதுக்கரை, கூடலூர் நகராட்சிகள், 15 பேரூராட்சிகள் மற்றும் 920 வழியோர கிராம குடியிருப்புகளுக்கும் 22ம் தேதி காலை 6 முதல் 23ம் தேதி இரவு 12 மணி வரை குடிநீர் விநியோக நிறுத்தப்படும். பணிகள் முடிக்கப்பட்டு 23ம் தேதி (நாளை) நள்ளிரவு முதல் குடிநீர் விநியோகம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே உள்ளாட்சி நிறுவனங்களும், பொது மக்களும் தங்கள் உள்ளூர் நீராதாரங்கள் மூலமாக மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் (பராமரிப்பு கோட்டம்-பில்லூர்) கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க