• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூப்பர் ஹீரோக்களின் ஆசான் ஸ்டான் லீ காலமானார்

November 13, 2018 தண்டோரா குழு

உலகப்புகழ் பெற்ற அமெரிக்க காமிக்ஸ் எழுத்தாளர் ஸ்டான் லீ வயது மூப்பால் காலமானார்.

ரொமானியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்த யூத குடும்பத்தில் 1922ஆம் ஆண்டு மகனாக பிறந்தவர் ஸ்டான் லீ.1961ல் ஜேக் கெர்பி மற்றும் ஸ்டீவ் டிட்கோ ஆகியோருடன் இணைந்து இவர் மார்வெல் என்ற நிறுவனத்தை உருவாக்கினார்.கற்பனை கதைகளின் தொடக்கமாக காமிக்ஸ் கதை புத்தகங்களின் வழியாக தனது கதாநாயகர்களை ஸ்டான் உருவாக்கினார்.லீயின் பெயரை சர்வதேச அரங்கில் சத்தமாக ஒலிக்கச் செய்த கதாபாத்திரங்களாக இவை பதிவாகின.

இதைத்தொடர்ந்து,ஸ்பைடர் மேன்,ஹல்க் உட்பட பல்வேறு சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்களுக்கு வடிவம் கொடுத்த லீ,காமிக்ஸ் உலகின் மன்னனாக வலம் வந்தார். இவரை கவுரவிக்கும் விதமாக,மார்வெல் காமிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஓவ்வொரு படங்களிலும் லீக்கு கவுரவத் தோற்றம் அளித்தது.ஹாலிவுட்டின் அசைக்க முடியாத தூணாக விளங்கிய இவர்,வித்தியாசமான படைப்புகளை விரும்புவோருக்கு ரோல் மாடலாகவும் திகழ்ந்தார்.

95 வயதான அவர்,லாஸ் ஏஞ்சல்சில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில்,வயோதிகம் காரணமாக நேற்று காலமானார்.அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இவரது இழப்பு ஹாலிவுட் சினிமா கலைஞர்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க