• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நவம்பர் 8-ம் தேதி கருப்பு உடை ஆர்பாட்டம்-ஸ்டாலின்

October 24, 2017 தண்டோரா குழு

பணமதிப்பு ரத்து நடவடிக்கை எடுத்த மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து நவம்பர் 8-ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது.

கடந்த 2016 நவம்பர் 8 ம் தேதி கறுப்பு தினத்தை ஒழிக்க, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், பணமதிப்பு ரத்து நடவடிக்கை எடுத்த மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து நவம்பர் 8-ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. அன்றைய தினம் திமுக தொண்டர்கள் கருப்புச் சட்டை அணிந்து கருப்பு தின ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். ஒரே கருத்துடைய கட்சிகள் அனைத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக தொண்டர்கள் பணமதிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட வணிகர்கள், விவசாயிகள், திரைத்துறையினரும் பங்கேற்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதைபோல், ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிக்கப்பட்ட நவ.,8 ம் தேதியை, எதிர்க்கட்சிகள் சார்பில் கறுப்பு தினமாக அனுஷ்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். அன்று நாடு முழுவதும், எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க