• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக இயக்குநர் சுசிகணேசன் புகார்

October 17, 2018 தண்டோரா குழு

கவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இயக்குநர் சுசிகணேசன் புகார் அளித்துள்ளார்.

திருட்டு பயலே,கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசிகணேசன் மீது பெண் எழுத்தாளர் லீனா மணிமேகலை பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

கடந்த 2005-ஆம் ஆண்டு சுசி கணேசனை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிக்காக தான் பேட்டி எடுத்ததாகவும், பேட்டிக்கு பின்னர் தாம் வீட்டிற்கு புறப்பட்டதாகவும்,அப்போது காரில் வந்த சுசி கணேசன்,வடபழனியில் வீட்டருகே இறக்கி விடுவதாகக் கூறி தம்மை காரில் ஏற்றிக் கொண்டதாகவும்,சிறிது நேரம் பேசிய பிறகு,திடீரென காரின் கதவுகளை அடைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இயக்குநர் சுசிகணேசன்,லீனா மணிமேகலை- உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது.சேற்றில் உருளும் பன்றி,வெள்ளைச் சட்டையோடு சுற்றுபவர்களை பார்த்து எப்படி பொறாமைப்படுமோ அப்படி ஒரு சம்பவத்தை உங்கள் கற்பனைத் திறனோடு ஒரு கதை பண்ணியிருக்கிறீர்கள்.இந்த உலகம் பொறுக்கிகளுக்கும், போக்கிரிகளுக்கும் உகந்தது என்பதை நீருபித்துவிட்டீர்கள்….

உங்களோடு சகதியில் உருண்டு இருந்தால்,ஒருவேளை இந்த பழியிலிருந்து என் பெயர் விடுபட்டிருக்குமோ??? அரை மணிப் பேட்டிக்கு அறிமுகமான முதல் அறிமுகத்திலியே,ஒருவர் தனியாக காரில் ஏறச்சொன்னால் ஏறிக்கொள்ளும் புதுமைப் பெண்ணான நீங்கள்,கத்தியை அந்த அப்பாவி (ஆடம்பரக் கார் வைத்திருந்தவன் எவனோ) நெஞ்சில் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர்.அத்தைனையும் பொய் மூட்டைகள் என்பதை நிருபிக்க ஆதாரம் என்னிடம் இருக்கிறது.அவற்றை வெளியிடுவதற்கு முன் – என்னை கொச்சைப்படுத்திய அதே பக்கத்தில் உன் மன்னிப்பை கோருகிறேன்.இல்லையென்றால் கோர்ட் மூலமாக மான நஷ்ட்ட வழக்கு தொடர்ந்து வருகிற தொகையை,தொடர்ந்து வருகிற தொகையை,உன்னைப் போன்ற #MeToo -இயக்கத்தை சுய பழிவாங்களுக்கு பயன்படுத்தும் “சமுதாய வைரஸ்களை”-களை களை எடுப்பதற்கு பயன்படுத்துவதைத் தவிற வேறு வழியில்லை என்று பதிவிட்டிருந்தார் .

இந்நிலையில்,கவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் புகார் அளித்துள்ளார்.மேலும்,லீனா மணிமேலை மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி இயக்குநர் சுசி கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க